- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி சார் மேல எனக்கு வருத்தம்தான்… அவர் எங்களுக்காக அதை செய்யலே - வெளிப்படையாக பேசிய...

ரஜினி சார் மேல எனக்கு வருத்தம்தான்… அவர் எங்களுக்காக அதை செய்யலே – வெளிப்படையாக பேசிய நடிகவேள் எம்ஆர் ராதா பேரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக வலம் வந்தவர் எம்ஆர் ராதா. நடிகவேள் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். நாடகங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான அவர் ஒரு கட்டத்தில் சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வந்தார். அன்றைய திரையுலக ஜாம்பவான்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடவுள் மறுப்பாளரான எம்ஆர் ராதா அவர் நடிக்கும் காட்சிகளில் கடவுள் குறித்தும் கடவுள் நம்பிக்கை குறித்தும் அவரது பாணியில் கிண்டலடித்து பேசுவது அப்போதைய ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. புரட்சித் தலைவர் எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டவர் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒருவராக எம்ஆர் ராதா இன்றும் நினைவில் இருக்கிறார். இவரது மகள்கள் ராதிகா சரத்குமார் நிரோஷா ராம்கி மற்றும் அவரது மகன் ராதாரவி ஆகியோர் இன்றும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

நடிகவேள் எம்ஆர் ராதாவின் மூத்த மகன் எம்ஆர் வாசுவும் ஒரு சிறந்த நடிகர்தான். அவரது மகன் வாசு விக்ரம் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் வில்லன் கேரக்டரில் நடித்த வாசு விக்ரம் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் போதிய வாய்ப்பின்றி டிவி சீரியல்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் எம்ஆர் வாசு விக்ரம் கூறியதாவது, எனக்கு ஒரு சின்ன வருத்தம் ரஜினி சார் மேல. சிவாஜி சாருக்கு ஏற்கனவே கோடிக்கணக்கான சொத்து இருக்கு. அவங்க சொத்தை வித்தாலே அவங்க பொழைச்சுக்கலாம். எங்க மாதிரி பேமிலி எல்லாம் அப்படி கிடையாது. எங்களுக்கு அவ்வளவு சொத்து கிடையாது. ரஜினி சாருக்கு இது நல்லாவே தெரியும். இதை நானே அவர்கூட இருக்கும்போது சொல்லி இருக்கேன்.

- Advertisement -

எம் ஆர் ராதா குடும்பத்துக்கு எனக்கு நான் தலைப்பேரன் இல்லையா நானு. அவர் வாழுகிற காலத்தில் சிவாஜி சாருக்கு பண்ணியதற்கு, பண்ணியது தப்பு இல்லே, அவரோட பணம். எங்க குடும்பத்துக்கும் ஏதாச்சும் பண்ணி இருக்கலாம் இல்லே. ரஜினி சார் பண்ணியிருக்கலாம். நான் முதல் பேரன். என் ஒருத்தனுக்கு பண்ணி இருந்தால் என்கூட 4 பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் பண்ணியிருப்பேன்.

இதெல்லாம் நான் கேட்க மாட்டேன். எம்ஆர் ராதா பேரன் நான். திமிர் இருக்கும். ஆனா அவர்கிட்ட திமிர் எல்லாம் இல்லே, வருத்தப்படறேன். இதை ஓபனா சொல்றேன். ஏதாவது செஞ்சிருக்கலாம். ஏன்னா சிரமத்தில் இருக்கிறோம் என்பதை அவரிடம் சொல்லியிருக்கிறேன். நல்லா வருவேடா என்று சொன்னவர், அப்படியே வாய் வார்த்தையோடு விட்டுவிட்டார். அது மிகப்பெரிய வருத்தம் என்று அந்த நேர்காணலில் நடிகர் வாசு விக்ரம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்