நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் இந்த ஆண்டின் துவக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் அதன்பிறகு குட் பேட் அக்லி படம் வெளியானது. ஜனவரி முதல் அக்டோபர் வரை வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸில் அஜீத்குமார் கலந்துக்கொண்டார்.
அதனால் அவர் இந்த ஆண்டு முழுவதும் படப்பிடிப்பில் எதுவும் கலந்துக்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டில்தான் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது. இப்போது மலேசியாவில் நடந்து வரும் கார் ரேஸில் கலந்துக்கொள்ள நடிகர் அஜீத்குமார் மலேசியால் இருக்கிறார். அங்குள்ள முருகன் கோவிலுக்கு அவர் சென்றது சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விதார்த். இந்த படத்தில் குருவி கேரக்டரில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது. மேலும் நடிகை அமலா பால் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. மைனா படத்தில் தம்பி ராமையா காமெடி நடிப்பும் அவருக்கு திருப்புமுனையாக இருந்தது.
நடிகர் விதார்த் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார். நல்ல நேர்த்தியான நடிகர் என்ற பெயர் இவருக்கு உண்டு. வித்யாசமான அதே நேரத்தில் நல்ல அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களை மட்டுமே விதார்த் தேர்வு செய்து நடிக்கிறார். அதனால் இவரது நடிப்பு எப்போதுமே தனித்துவமாக தெரிகிறது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் என்ற படத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்திருந்தார். அதில் அஜீத்குமாரின் 4 சகோதரர்களில் ஒருவராக நடிகர் விதார்த் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விதார்த் கூறியதாவது, வீரம் படத்தில் அஜீத்குமாருடன் நடித்தேன். படத்தில் மட்டுமல்ல, நிஜத்துலேயும் அஜீத் என்னை அவர் தம்பி மாதிரிதான் பார்த்துகிட்டார்.
ஒரு பாடலுக்காக அஜீத்குமார் தமன்னா படக்குழு எல்லாம் சுவிட்சர்லாந்து போனாங்க. அப்போ என்கிட்ட அஜீத் சார், நீ அங்க போய் இருக்கியா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். உடனே அவர் என்னை விசா போட்டு ஸ்விட்சர்லாந்துக்கு கூட்டிட்டு போயிட்டார். அந்த அளவுக்கு அவர் என் மீது தம்பி போல அன்பு காட்டினார் என்று நடிகர் விதார்த் கூறியிருக்கிறார்.





