- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சத்யராஜ் மகள் திவ்யா குறித்து பேச நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு சென்னை உயர்நீதி மன்றம்...

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா குறித்து பேச நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் அவர் நடித்திருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளராக நீண்ட காலமாக இருந்து வருகிறார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அவர் பத்திரிகையாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரங்கநாதனின் ஆஜானுபாகுவான தோற்றத்தை பார்த்து மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் பயில்வான் என்று பெயரை அடையாளமாக தந்திருக்கிறார். சமீபகாலமாக நடிகர் நடிகைகள் குறித்தும் திரைப்படங்கள் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக சத்யராஜ், அவரது மகள் திவ்யா குறித்தும் அவர் பேசினார்.

- Advertisement -

நடிகர் சத்யராஜ் எம்ஜிஆர் ரசிகராக இருந்த போதிலும் திமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். அதே போல் அவரது மகள் திவ்யா சத்யராஜூம் திமுகவில் இணைந்து விட்டார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்து பேசியிருந்தார். அவரது திருமணம் மற்றும் ஜாதகம் குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்களை நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.

தன்னை அவதூறாகப் பேசியதாகக் கூறி திவ்யா சத்யராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி திவ்யா சத்யராஜூக்கு எதிராக அவதூறான கருத்துகளை பேசவோ அல்லது வெளியிடவோ பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதித்தார்.

- Advertisement -

திவ்யாவுக்கு எதிரான ஆட்சேபகரமான அவதூறு வீடியோக்களை தங்களது தளங்களில் தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜூக்கு எதிராக கருத்து தெரிவிக்க தடை விதித்துள்ளது.

எனவே திவ்யா சத்யராஜ் குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் ஒளிபரப்புவதை கூகுள் பேஸ்புக் எக்ஸ் தளம் என எந்த சமூக வலைதளங்களில் அனுமதிக்க கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனவே பயில்வான் ரங்கநாதன் இனி திவ்யா சத்யராஜ் குறித்து பேசக்கூடாது என்று தடை உத்தரவாக பிறக்கப்பிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்