குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். அதே போல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 50 ஆண்டுகளாக டாப் லெவல் ஹீரோவாக வலம் வருபவர்தான் நடிகர் கமல்ஹாசன். இப்போது அவரை ரசிகர்கள் விண்வெளி நாயகன் என்று அழைக்கின்றனர்.
இன்னும் சில வாரங்களில் அவர் ராஜ்ய சபா எம்பி ஆகவும் பொறுப்பேற்க இருக்கிறார். உலகநாயகன் என தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று சொன்ன நடிகர் கமல்ஹாசன் இனி எம்பி என ரசிகர்களால் மட்டுமின்றி தமிழக மக்களாலும் அழைக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தக்லைஃப் படத்தில் அவரை விண்வெளி நாயகா என்றும் புகழ்ந்து பாடல் வரிகள் வருகின்றன.
இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன் சிம்பு இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்த தக்லைஃப் படம் வருகிற 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு சில தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தக்லைஃப் படத்தை கர்நாடகா மாநிலத்தில் வெளியிட கர்நாடகா கோர்ட் தடை விதித்த நிலையில், அந்த மாநிலத்தில் மட்டும் தக்லைஃப் படம் ரிலீஸ் ஆகாது.
தக்லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் டைரக்ட் செய்துள்ள நிலையில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள நிலையில் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தக்லைஃப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன் வழங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சிம்புவுக்கு கமல் ரூ. 40 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறார். நடிகர் சிம்பு முதன்முறையாக வாங்கிய அதிகபட்ச சம்பளம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.
மேலும் நடிகை திரிஷாவுக்கு ரூ. 12 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அபிராமிக்கு ரூ. 50 லட்சமும் நடிகர் அசோக் செல்வன், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் இருவரும் பிராபர்ட்டி ஷேர் அடிப்படையில் படத்தின் மொத்த லாபத்தில் பங்கு பிரித்து கொள்வதாக ஒப்பந்தமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.





