- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போக அதுதான் காரணம் - மனம் திறந்து பேசிய நடிகர்...

நான் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போக அதுதான் காரணம் – மனம் திறந்து பேசிய நடிகர் விக்னேஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். சின்னத்தாயி பொங்கலோ பொங்கல் கிழக்கு சீமையிலே செல்லக்கண்ணு என பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் விக்னேஷ் நடித்த படங்கள் எதுவும் தமிழில் வெளியாகவில்லை.

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த சேது படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க வேண்டியவர் விக்னேஷ் தான். ஆனால் ஏனோ அவர் அப்போது நடிக்க முடியவில்லை. பிற்காலத்தில் பெரிய நடிகராக வருவார் என்று கணிக்கப்பட்ட விக்னேஷ் இப்போது ஒரு படத்தின் வெற்றிக்காக தொடர்ந்து போராடும் நடிகராக மாறி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

தொடர்ந்து தன்னால் ஹிட் படங்களில் நடிக்க முடியாமல் ஜெயிக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் விக்னேஷ் மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து விக்னேஷ் கூறியதாவது, ஒரு வெற்றியை நாம் தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஆரம்பத்தில் எனக்கு கிடைத்த வெற்றியை நான் கொண்டாடினேனே தவிர அதை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்த தெரியவில்லை.

அந்த சமயத்தில் எனக்கு வழிகாட்ட யாருமே இல்லை. அதுவே எனக்கு மிகப்பெரிய மைனஸ் ஆகிவிட்டது. சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு தங்குவதற்கு கூட இடமில்லை. தெரிந்தவர்களும் யாரும் இல்லை. என்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும் தான் எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டேன். அஜீத் விஜய் போன்று அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்புகள் எனக்கு இருப்பதாக சொன்னார்கள்.

- Advertisement -

ஆனால் அப்போது எனக்கு அது புரியவில்லை. கிழக்கு சீமையிலே படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பல தயாரிப்பாளர்கள் என்னிடம் அட்வான்ஸ் கொடுத்தார்கள். அது நல்ல கதையா? பெரிய இயக்குனரா என்று யோசிக்காமல் அந்த படங்களில் எல்லாம் நடித்தேன். சின்னத்தாயி கிழக்கு சீமையிலே படங்கள் பெரிய ஹிட் ஆனது.

அதன்பிறகு பெரிய இயக்குனர்கள் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் என்னை அணுகியபோது என்னால் கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. முன்பே அட்வான்ஸ் வாங்கிய படங்களை ஒப்புக்கொண்டதால் பெரிய வாய்ப்புகளை தவற விட்டுவிட்டேன். நான் எடுத்த சில தவறான முடிவுகள் எனக்கு பின்னடைவை தந்து விட்டன என்று நடிகர் விக்னேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்