- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 ஆண்டுகளாக போலீஸை பொம்மையாக வைத்து விளையாடிட்டு இருந்தீர்களா? - நெல்லையில் நடந்த பிரசார...

5 ஆண்டுகளாக போலீஸை பொம்மையாக வைத்து விளையாடிட்டு இருந்தீர்களா? – நெல்லையில் நடந்த பிரசார கூட்டத்தில் தளபதி விஜய் ஸ்டாலினுக்கு கேள்வி!

- Advertisement -

இன்று தூத்துக்குடி மாவட்டம் வந்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நெல்லையில் நடந்த தவெக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது நடிகர் விஜய் பேசியதாவது, காசை கொடுத்து காங்கிரஸை உங்கள் பையில் போட்டுக் கொண்டீர்கள். ஆனால் உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தவெக பக்கம்தான் நிற்கின்றனர்.

என்னை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக கரூர் சம்பவத்தை ஏற்படுத்தி என் மீது பழி போட்டார்கள். அப்போதும் மக்கள் என் பக்கம் நின்றார்கள். பிறகு ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். அதையும் நான் பெரிதாக கண்டுகொள்ளாமல் என் வழியில் நான் போய்க்கொண்டு இருந்தேன். பிறகு எஸ்ஓபி கொண்டு வந்து பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார்கள்.

- Advertisement -

மீண்டும் ஒரு மாதத்துக்கு முன்பு என்னை சுற்றியிருந்தவர்களை வைத்தே என் மீது அவதூறு பரப்பினார்கள். ஆனால் அப்போதும் என்னை அவர்களால் தடுக்கவோ முடக்கவோ முடியவில்லை. அப்போதும் மக்கள் என் பக்கம் நின்றார்கள். இப்படி மக்களின் ஆதரவு எனக்கு இருந்துக்கொண்டே இருப்பதால் இந்த பையனை என்ன செய்வது என திமுகவும் ஸ்டாலினும் தடுமாறுகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி அமைத்தால், அமைந்தால் என்ன கண்டிப்பாக ஆட்சி அமைப்போம். அப்போது மக்கள் விரும்புகிற ஒரு ஆட்சியை தருவோம். எம்ஜிஆர் போல காமராஜர் போல தமிழகத்தில் ஒரு ஆட்சியை கொண்டு வருவோம். இந்த தலைமுறை மட்டுமின்றி வருகிற தலைமுறை எல்லாம் நல்லா இருப்போம். எல்லோருமோ நல்லா இருப்போம்.

- Advertisement -

இரண்டரை வயது குழந்தைகயை கொன்ற திமுக நிர்வாகி, கழிவறை வசதி இல்லாததால் காட்டுப்பக்கம் ஒதுங்கின பிளஸ் 2 மாணவி உலகத்தை விட்டே போன கொடுமை இதற்கு எல்லாம் யார் காரணம்? 5 ஆண்டுகளாக போலீசை பொம்மையாக வைத்துக்கொண்டு ஸ்டாலின் விளையாடிக் கொண்டு இருந்தாரா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ன ஆனது என்றுதான் கேள்வி கேட்கிறோம்.

வருகிற 23ம் தேதி காலையில் பக்காவாக ரெடியாக நேராக ஓட்டுச்சாவடிக்கு சென்று விசில் சின்னம் பொத்தானை அழுத்துங்கள். தமிழ்நாட்டில் விசில் புரட்சி ஏற்படுத்துங்கள். எல்லா வசதிகளையும் வேண்டாம் என்று மறுத்து விட்டு மக்களுக்கு நன்றி கடன் செலுத்த நான் வந்திருக்கிறேன். எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். மக்கள் பணத்தில் கை வைக்க மாட்டேன். இப்படி சொல்கிற தைரியம் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அதிமுக கட்சிகளுக்கு இருக்கிறதா என்று நடிகர் விஜய் பேசினார்.

- Advertisement -

சற்று முன்