- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்சி துவங்கி 6 மாசமாச்சு, இன்னும் மக்கள் பிரச்னைக்காக ஆவேசமாக குரல் கொடுக்காத நடிகர் விஜய்...

கட்சி துவங்கி 6 மாசமாச்சு, இன்னும் மக்கள் பிரச்னைக்காக ஆவேசமாக குரல் கொடுக்காத நடிகர் விஜய் – இவர் எதிர்க்கப் போறது யாரை? – போட்டுத் தாக்கிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவித்தார். தி கோட் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும், அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட்டு, 2026ம் ஆண்டில் தமிழக முதல்வர் பதவிக்காக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பனையூரில் தனது கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அங்குள்ள வளாகத்தில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். கட்சி பாடலையும் வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், விரைவில் மாநாடு தேதியை அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். பல ஆண்டுகளாக பெற்றோரை பார்க்காமல் தவிர்த்து வந்த நிலையில், அரசியல் கட்சி துவங்கிய பிறகு பெற்றோருடன் மீண்டும் உறவை புதுப்பித்திருக்கிறார் நடிகர் விஜய்.

இந்நிலையில் இந்த கட்சி கொடி அறிமுகம் மற்றும் கொடியேற்று விழாவில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை. இது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஒரு கணவர் நடத்தும் கட்சியின் கொடியேற்று விழா, தன் அப்பா நடத்தும் கட்சி விழா என பார்வையாளர்களாக கூட அவர் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருப்பதாவது, ஆன்மிகத்தையும் கம்யூனிசத்தையும் கலந்து கொடி தயாரித்திருக்கிறார் விஜய். வெளியில் கொடியேற்ற அனுமதி கிடைக்காததால், பனையூரில் தனது வீட்டுக்குள் கொடியேற்றி இருக்கிறார் விஜய்.

தந்தை எடுக்கும் விழாவில், மகன் மகள் கலந்துக்கொள்வில்லை. மனைவி சங்கீதா லண்டனில் இருக்கிறார். ஜேசன் சஞ்சய் சென்னையில்தான் கதை டிஸ்கஷனில் இருக்கிறார். இப்படி குடும்பத்தில் உள்ளவர்களே விஜய் நடத்தும் விழாவை புறக்கணித்து அலட்சியப்படுத்துகின்றனர் என்றால், குடும்பத்தில் பிரச்னை, குழப்பம் இன்னும் இருக்கிறது. விஜய் இன்னும் விலைவாசி உயர்வை பத்தி பேசவில்லை. யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறார் என்றும் தெரியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் அதில் விமர்சித்து இருக்கிறார்.

சற்று முன்