- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழகத்தை அடகு வைத்து பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த திமுக… முதல்வர் ஸ்டாலின் குறித்து காரசாரமாக விமர்சித்த...

தமிழகத்தை அடகு வைத்து பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த திமுக… முதல்வர் ஸ்டாலின் குறித்து காரசாரமாக விமர்சித்த தவெக தலைவர் நடிகர் விஜய்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இப்போது ஜனநாயகன் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகர் விஜய் திமுக அரசையும் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போது ஸ்டாலின் டெல்லி சென்றது குறித்தும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 3 முறை நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. ஆனால் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்தும் பேசி இருக்கிறார். இதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளும் போது அவர்கள் டெல்லிக்கு செல்வர். இதேபோல் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் டெல்லிக்கு பயணம் செய்துள்ளார்.

டாஸ்மார்க் ஊழல் விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மற்றும் திமுகவின் தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை நடந்தது. இதனிடையே டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடுடு செய்து இடைக்கால தடை பெற்றது.

- Advertisement -

ஆனால் இது நிரந்தர தடை இல்லை என்பதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்துக்கு செல்வது போல டெல்லி சென்றுள்ளார். கடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லாததற்கான காரணங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அப்போது சொன்ன காரணங்கள் தான் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. எனவே தற்போது நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்ற காரணம் அமலாக்கத்துறை சோதனைதான்.

1000 கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாக வைத்து டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியையும் தனியாக சந்தித்துள்ளார். திமுகவின் குடும்ப சுயநலத்துக்காக தமிழகத்தை அடக்க வைத்து பாஜகவிடம் அடைக்கலம் புகுந்தது திமுக. பாஜக திமுக மறைமுக கூட்டணி இருப்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது திமுக பாஜக இடையிலான மறைமுக கூட்டு பேர அரசியலும் வெளிச்சத்துக்கு வந்ததையே காட்டுகிறது. எதிர்கட்சியாக இருக்கும் போது கருப்பு பலூன் ஆளுங்கட்சியான பிறகு கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் அந்த பதிவில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்