நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி துவங்கிய போது சினிமாவில் இருந்து விலகுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டார். ஜனநாயகன் படத்துக்கு பிறகு இனி நடிக்க மாட்டேன். இதுதான் என்னுடைய கடைசி படம் என்றும் கூறியிருந்தார். ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை பொறுத்து விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து முக்கிய முடிவை எடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.
சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாக உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படையினர் பலத்த சோதனைகளை நடத்தி வருகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் மிகப்பெரிய அளவில் கவனம் பெற காரணம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் வேட்பாளருக்கு போட்டியிடுகிறார். பல மாவட்டங்களில் நடந்த அவரது அரசியல் கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால் இந்த வரவேற்பு ஆதரவு எல்லாம் வருகிற தேர்தலில் ஓட்டுகளாக மாறுமா என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.
கரூர் சம்பவம் சிபிஐ விசாரணை சங்கீதா விவாகரத்து மனு நடிகை திரிஷாவுடன் கிசுகிசு என பல சர்ச்சைகள் விமர்சனங்களால் தேர்தலில் அது தவெக வாக்கு எண்ணிக்கையை பாதிக்கலாம். இந்த தேர்தலில் நடிகர் விஜய் 8 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் முதல்வராக சாத்தியமே இல்லை என்றும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
தனது முதல்வர் ஆசை லட்சியம் இந்த சட்டசபை தேர்தலில் நிறைவேறாது என்பதை தெரிந்து கொண்ட விஜய் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். ஆண்டுக்கு 2 படங்களில் அவர் நடிக்க உள்ளார். தனது ரசிகர்களில் பலர் அடுத்த 2031 தேர்தல் வரும்போது வாக்களிக்கும் வயதை எட்டி விடுவார்கள் என்பதால் வருகிற தேர்தலை காட்டிலும் 2031ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக விஜய் கருதுகிறார்.
அதனால் இந்த தேர்தல் முடிந்ததும் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக அட்லி விஜய் கூட்டணியில் வெளியான தெறி மெர்சல் பிகில் படங்கள் மாபெரும் வசூலை குவித்தன. ஏற்கனவே பவன் கல்யாண் போன்ற சில நடிகர்கள் அரசியலில் இருந்துக் கொண்டே படங்களிலும் நடித்து வருகின்றனர். அதே போல் விஜயும் இனி ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். மீண்டும் விஜய் நடிக்க வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





