- Advertisement -
Homeபொழுதுபோக்குஆளுகிற அரசு அதை எல்லாம் செய்ய தவறி விட்டது, அதைப்பத்தி பேச நான் இங்க வரலை,...

ஆளுகிற அரசு அதை எல்லாம் செய்ய தவறி விட்டது, அதைப்பத்தி பேச நான் இங்க வரலை, அதற்கான இடமும் இதுவல்ல – அரசியல்வாதியாக கோபப்பட்ட நடிகர் விஜய்

- Advertisement -

கடந்தாண்டு நடிகர் விஜய் சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல், இரண்டு, மூன்றாமிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் கல்வி விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் பங்கேற்ற நிலையில், காலை முதல் இரவு வரை விழா நீடித்தது.

இதனால் பலமணி நேரம் மேடையில் நடிகர் விஜய் கால்கடுக்க நின்று சிரமப்பட்டார். அதனால் இந்த முறை, இரண்டு கட்டங்களாக இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் கட்ட விழா இன்று சென்னையில் காலையில் துவங்கி நடந்து வருகிறது. இதில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். மற்ற மாவ்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வருகிற 3ம் தேதி, இதே போன்ற ஒரு விழாவில் ரொக்கப் பரிசுடன், நடிகர் விஜய் கல்வி விருதுகளை வழங்க இருக்கிறார்.

இன்றைய விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், நிகழ்ச்சியின் துவக்கத்தில் விழா மேடையில் பேசினார். அப்போது, அங்கிருந்த மாணவ, மாணவியரை அன்பு தம்பிகளே, தங்கைகளே என்று குறிப்பிட்டார். மேலும் குட்டி நண்பர்களே, நண்பிகளே என்றும் அவர்களை அழைத்து உற்சாகப்படுத்தினார். உங்களது எதிர்காலம் குறித்து உங்களுக்கும் சில திட்டமிடல்கள் இருக்கும். இருந்தாலும் எனது அனுபவத்தில் சில விஷயங்களை பகிர்ந்துக்கொள்கிறேன் என்று கூறி தன் பேச்சை ஆரம்பித்தார்.

வாழ்க்கையில் நட்பு முக்கியம். உங்கள் நட்பு வட்டாரத்தில் யாரேனும் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களை முடிந்தால் நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதே நேரத்தில் நீங்கள் அந்த தவறான பழக்கங்களில் ஈடுபட்டு விடாதீர்கள். அப்படி ஈடுபடவும் கூடாது.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு மிகவும் அதிகமாக விட்டது. இளம் வயதினர், போதைப் பழக்கங்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர். பெற்றோர் என்ற முறையில், ஒரு அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையில் எனக்குமே ரொம்பவும் அச்சமாக தான் இருக்கிறது.

இந்த போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது எல்லாம் அரசோட கடமை. இதில் ஈடுபட்டுள்ள இளம் வயதினரை காப்பாற்றுவது எல்லாம் அரசோட கடமை. இப்போது ஆளுகிற அரசு அதை எல்லாம் தவற விட்டுட்டாங்க. அப்படீங்கற பத்தி எல்லாம் நான் இங்க பேச வரலை. அதற்கான மேடையில் இதுவல்ல. சில நேரங்களில் அரசாங்கத்தை விட நம்ம லைப்பை நாமதான் பார்த்துக்கணும். நம்ம பாதுகாப்பை நாமதான் பார்த்துக்கணும். உங்களது சுயகட்டுப்பாடு, ஒழுக்கத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விஜய் பேசினார்.

சற்று முன்