ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பெண்களை வாழ்த்து பாராட்டி பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய், தனது மகளிர் தின வாழ்த்துகளை வீடியோ ஒன்று வெளியிட்டு கூறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற என்னுடைய அம்மா அக்கா தங்கச்சி தோழிகள் உங்கள் அத்தனை பேருக்கும் இந்த நாளில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தினம் வாழ்த்துகள். சந்தோஷம்தானே? பாதுகாப்பா இருந்தா தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதப்போ இன் செக்யூரிட்டியா இருக்கறப்போ எந்த சந்தோஷமும் இருக்காது தானே?
அப்படீன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. என்ன செய்ய, நீங்க நாம எல்லாரும் சேர்ந்துதான் இந்த திமுக கவர்ன்மென்டை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி நம்மை ஏமாத்துவாங்கன்னு இப்பதான் எனக்கு தெரியுது. எல்லாமே இங்கே மாறக் கூடியதுதானே? மாற்றத்துக்கு உரியதுதானே?
கவலைப்படாதீங்க, 2026 ஆண்டுல நீங்க எல்லோரும் சேர்ந்து இல்லே, நாம எல்லோரும் சேர்ந்து இந்த மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியவர்களை மாற்றுவோம். அதுக்கு இந்த மகளிர் தினமான இன்னிக்கு நாம் எல்லோருமா சேர்ந்து உறுதி ஏற்போம்.
ஒண்ணு மட்டும் சொல்றேன். எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய ஒரு மகனா அண்ணனா தம்பியா தோழனா உங்க கூட நான் நிற்பேன். நன்றி வணக்கம் என்று அந்த வீடியோவில் நடிகர் விஜய், மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





