- Advertisement -
Homeபொழுதுபோக்குவிவாகரத்து விவகாரத்தில் ரூ. 250 கோடி செட்டில்மென்ட் கேட்ட சங்கீதா - விஜய் ஒத்துக்கொண்ட தொகை...

விவாகரத்து விவகாரத்தில் ரூ. 250 கோடி செட்டில்மென்ட் கேட்ட சங்கீதா – விஜய் ஒத்துக்கொண்ட தொகை இத்தனை கோடிகளா? மகன் மகள் குறித்து தளபதி எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

தமிழக அரசியல் வட்டாரத்திலும் சினிமாத் துறையிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தில் தலைவராக தேர்தல் களத்தில் விஜய் பிஸியாக இருந்து வருகிறது.

பெரம்பூர் திருச்சி கிழக்கு என அவர் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் மற்றும் தனது தவெக கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் மற்ற முக்கிய தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி பலத்துடன் களத்தில் உள்ள நிலையில் தனி ஒருவனாக இந்த தோ்தலை விஜய் எதிர்கொள்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது மனைவி சங்கீதா, கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு, மனு தாக்கல் செய்த சம்பவம் தளபதி ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினர் தொண்டர்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாளை 20ம் தேதி திங்கட்கிழமை இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் விஜய் – சங்கீதா விவகாரத்து பிரச்னையில் சங்கீதாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் படுதோல்வி ஏற்பட்டுள்ளது. விஜயை சட்டப்படி பிரிவது என்பதில் சங்கீதா உறுதியாக இருக்கிறார். மேலும் இதற்காக தனது கணவர் விஜய் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் 250 கோடி ரூபாய் செட்டில்மென்ட் தர வேண்டும் என்றும் சங்கீதா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சங்கீதாவின் வழக்கறிஞர் மற்றும் விஜயின் வழக்கறிஞர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் 35 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா இருவருக்கும் ஒரு தந்தையாக இருந்து அவர்களை பார்த்துக்கொள்வதாகவும் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆனால் இதற்கு சங்கீதா தரப்பு முழுமையான ஒப்புதல் தெரிவித்ததா என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. நாளை செங்கல்பட்டு கோர்ட்டில் நடக்கும் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராவாரா? அல்லது சங்கீதா தரப்பில் மேலும் பிரச்னைகள் எதுவும் நீதிமன்றத்தில் வெடிக்குமா என்ற குழப்பமான கேள்விகளுடன் தவெக கட்சியினர் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்