- Advertisement -
Homeபொழுதுபோக்குசொந்த தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்த நடிகர் கமல்ஹாசன் - அதற்கு...

சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்த நடிகர் கமல்ஹாசன் – அதற்கு பின்னால் இத்தனை விவகாரங்கள் இருக்குதா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இதுவரை அவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 236 படங்களில் நடித்து அந்த படங்கள் வெளியான நிலையில் இப்போது தனது 237வது படத்தில் நடிக்க நடிகர் கமல் ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் டைரக்ட் செய்ய உள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவி மற்றும் ருக்மணி வசந்த் ஆகிய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருவருமே மற்ற படங்களில் ஏற்கனவே கமிட் ஆகி பிஸியாக இருப்பதால் கமல் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டனர். இதையடுத்து நடிகர் சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கமலுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் சொந்தமாக உள்ளது. கடந்த 35 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிறுவனம் சார்பில் கமல் தனது சொந்த படங்கள் பலவற்றை தயாரித்திருக்கிறார். அதே நேரத்தில் மற்ற ஹீரோக்கள் நடித்த படங்களையும் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்திருக்கிறார். இதில் கமல் நடித்த படங்களும், மற்ற ஹீரோக்கள் நடித்த படங்களும் சில நேரங்களில் ஜெயித்திருக்கின்றன. சில நேரங்களில் பலத்த தோல்வியை சந்தித்திருக்கின்றன.

கடந்தாண்டில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. அதே நேரத்தில், இந்த ஆண்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த கமல் நடித்த தக்லைஃப் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படி லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும் நிலையில், இனி தனது சொந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிப்பது என்ற அதிரடி முடிவுக்கு கமல்ஹாசன் வந்திருக்கிறார்.

- Advertisement -

மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக உள்ள கமல்ஹாசன், திமுகவின் அபிமானியாக மாறி திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாக வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ளார். அரசியல்வாதியாக உள்ள அவரை வைத்து படம் எடுக்க பெரும்பாலான நிறுவனங்கள் தயாராக இல்லை. திமுக விசுவாசியான அவர் மீது ரசிகர்களுக்கு பெரிய அபிமானம் இல்லை. முன்பிருந்த அபிமானம் கமலிடம் ரசிகர்களுக்கு இப்போது இல்லை.

அதனால் கமல் நடிக்கும் படங்களை தயாரித்தால் பெரிய லாபம் என்பதை உறுதியாக எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே இந்தியன் 2 தக்லைஃப் படங்கள் தந்த பலத்த தோல்வியும் தயாரிப்பாளர்களை நடுங்க வைத்திருக்கிறது. தவிர கமல் கேட்கும் 150 கோடி ரூபாய் சம்பளம், லாபத்தில் பங்கு போன்றவை தர தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இல்லை. அதனால்தான் இனி தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பு சொந்த படங்களில் மட்டுமே நடிக்கும் ஒரு முடிவுக்கு கமல் தள்ளப்பட்டு இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்