- Advertisement -
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி 2026 – 2029 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் தலைவராக சரவணன் பொதுச்செயலாளராக ரமேஷ் குமார் பொருளாளராக வெற்றிவேல் துணைத்தலைவர்களாக ஆர் திவாகரன் பி லோகநாதன் உள்பட 15 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் அமைச்சர் ராஜ்மோகன் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





