- Advertisement -
Homeபொழுதுபோக்குகேம் சேஞ்சர் படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய்தான், கதை ரொம்ப பிடித்தும் நடிக்க...

கேம் சேஞ்சர் படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய்தான், கதை ரொம்ப பிடித்தும் நடிக்க மறுத்துட்டாராம் – ஷங்கர் அப்படி ஒரு கண்டிஷன் போட்டிருக்காரே?

- Advertisement -

நடிகர்கள் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் விக்ரம் தனுஷ் போன்ற நடிகர்கள் படத்தை இயக்குவது என்றால் இயக்குனர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதே போல் பாரதிராஜா கே பாலசந்தர் பாலு மகேந்திரா மகேந்திரன் வெற்றிமாறன் பாலா ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஹீரோக்களும் அதிக ஆர்வம் காட்டுவர்.

ஏனென்றால் நட்சத்திர நடிகர்கள், நட்சத்திர இயக்குனர்கள் இணைந்தால் அந்த படங்கள் வேற லெவலில் இருக்கும். குறிப்பாக ஷங்கர் இயக்கிய எந்திரன் சிவாஜி, இந்தியன், நண்பன், முதல்வன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் தரமான படங்களாக இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் வெற்றிப் படங்களாக இருக்கின்றன.

அந்த வகையில் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் வெளிவரப் போகும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் நாயகனாக ராம் சரண் நடித்துள்ளார். கியாரா அத்வானி எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் விஜய்தான் என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நண்பன் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மாஸ் ஹிட் ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்திலும் நடிகர் விஜயை நடிக்க ஷங்கர் கேட்டுள்ளார். அதாவது கொரோனா காலகட்டத்தில், இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர்களுக்காக ஒரு வாட்சப் குரூப் ஆரம்பித்துள்ளார். அப்போது தனக்கு ஒரு கதை வேண்டும் என குரூப்பில் ஷங்கர் கேட்டுள்ளார்.

அப்போது கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை தான் கேம் சேஞ்சர் கதை. அதை ஸ்கிரிப்ட் ஆக தயார் செய்த இயக்குனர் ஷங்கர் அந்த கதையை நடிகர் விஜயிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவுடன் மிரண்டு போன விஜய், உடனடியாக அந்த படத்தில் நடிக்கவும் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் ஷங்கர் சொன்ன ஒரு விஷயத்தில், விஜய் உடனடியாக பின்வாங்கி விட்டார்.

அதாவது கேம் சேஞ்சர் கதையில் நடிக்க 1.5 ஆண்டுகள் அதாவது 15 மாதங்கள் நீங்கள் தொடர்ச்சியான கால்ஷீட் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இது நமக்கு சரிப்பட்டு வராதே என யோசித்த நடிகர் விஜய், பிறகு மறுத்து விட்டார். அதன்பிறகு வாரிசு படத்தில் கமிட் ஆகி அந்த படத்தில் விஜய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

சற்று முன்