தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் துவங்கியது. கிராமிய நடன கலைஞர்கள், கலை நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மேடை ஏறினார்.
மாநாட்டு திடலில் திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை, தொண்டர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை விஜய் வெளிப்படுத்தினார். அதன் பிறகு அவர் மேடைக்கு முன் புறம் நீளமாக போடப்பட்டிருந்த 800 மீட்டர் தூரமுள்ள ரேம்ப் வாக் மேடையில் நடந்தார்.
நீளமான மேடைக்கு இருபுறங்களிலும் திரண்டிருந்த ரசிகர்களை, தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி அவர் தனது மகிழ்ச்சியை விஜய் வெளிப்படுத்தினார். அப்போது தொண்டர்களில் சிலர், தங்களிடம் இருந்த கட்சி கொடிகளை அவரை நோக்கி வீசினர். அப்போது அந்த கட்சி கொடிகளை கையில் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய், தனது தோள்களில் அணிந்தபடி தொண்டர்களுக்கு உற்சாகமாக கையசைத்தார்.
தொடர்ந்து பலரும் கட்சி கொடிகளை விஜயை நோக்கி வீசிய நிலையில், அதை விஜயுடன் வந்த பாதுகாவலர்கள் எடுத்துக்கொண்டனர். ஒரு சிலர் வீசிய கட்சி கொடிகளை திரும்ப அவர்களிடமே நடிகர் விஜய் வீசி தனது அன்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு மேடை ஏறி அவர் ரசிகர்களை தொடர்ந்து கையசைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். மேலும் கண்கலங்கியபடி சில நிமிடங்கள் நின்றிருந்தார் தொடர்ந்து விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகிகளுக்கு மலர் தூவி நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க அதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. அதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் வரவேற்று பேசினார். அதற்கு முன்னதாக நடிகர் விஜய் 101 அடி உயரம் உள்ள மாநாட்டு கொடிக்கம்பத்தில் தனது தவெக கொட்டி கட்சிக்கொடியை ஏற்றினார். அதன் பிறகு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வாகை என்ற கட்சி பாடல் வெளியிடப்பட்டது.
ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டத்தில் நடிகர் விஜயின் கட்சி மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜயின் குரல் ஒலித்தது. அதில் விஜய், மக்கள் விரும்பும் சமத்துவ சமுதாயம் உருவாக நான் வரேன் என்று அவர் கூறிய அந்த ஆடியோ ஒளிபரப்பானது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்ட தலைவர் விஜய் அவர்களது வழியில் தமிழக அரசியலில் நான் முன்னெடுக்க வருகிறேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார்.





