தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் வானத்தை போல சூர்யவம்சம் பூவே உனக்காக உன்னை நினைத்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். அவரது இயக்கத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த வானத்தை போல படமும் பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் அந்த படம் குறித்து கூறியதாவது, ஒரு ஆக்சன் ஹீரோ விஜயகாந்தை வெச்சு வானத்தை போல மாதிரி ஒரு ஷாப்ட் ஆன படம் எடுக்கிறோமோ என்ற தயக்கம் எனக்கு முதலிலேயே இருந்தது. ஆனா ஆஸ்கர் ரவி என்ன சொன்னார் என்றால் ஏற்கனவே விஜயகாந்த் இந்த மாதிரி ஷாப்ட் ஆன படங்களில் நடித்திருக்கிறார்.
உதாரணமாக வைதேகி காத்திருந்தாள் என் புருஷன் எனக்கு மட்டும்தான் போன்ற ஷாப்ட் ஆன கதை கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவரை வெச்சு தாராளமாக எடுக்கலாம் என்று சொன்னார். அவர் சொல்றது நியாயமாக இருக்குது என்று எனக்கும் தோன்றியது.
ஆனால் விஜயகாந்துக்காக தான் நான் அந்த படத்தின் பர்ஸ்ட் ஆஃப் நான் மாத்தினேன். என்னுடைய ஒரிஜினல் பர்ஸ்ட் ஆஃப் இப்போ இருக்கிற வானத்தை போல படத்துல கிடையவே கிடையாது. விஜயகாந்த் மீனாவை சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணுவார், மீனா விஜயகாந்தை இன்சல்ட் பண்ற மாதிரி கதை எல்லாம் அதுல கிடையவே கிடையாது.
மத்தபடி நான் பர்ஸ்ட் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் அவங்க அண்ணன் தம்பி பாசம் அந்த தம்பிகளோட காதல் அவங்களோட பாசம் என்று அந்த மாதிரி விஷயங்களை மட்டுமே வைத்துதான் கதை பண்ணியிருந்தேன். என்னுடைய கதையில் இருந்தது செகண்ட் ஆஃப் ல மட்டும்தான் இருக்குது.
நான் நினைச்சிருந்த எழுதியிருந்த அந்த வானத்தை போல ஒரிஜினல் கதையை படமாக எடுத்திருந்தால், இன்னும் 100 வருஷத்துக்கு தமிழ் சினிமாவின் தலை சிறந்த ஸ்கிரீன் ப்ளே கதையாக வானத்தை போல படம் பேசப்பட்டு இருக்கும் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.





