- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் லீக் குறித்து ரஜினி கமல் கூட எதிர்ப்பு தெரிவித்தனர் - ஆனால் படத்தின்...

ஜனநாயகன் படம் லீக் குறித்து ரஜினி கமல் கூட எதிர்ப்பு தெரிவித்தனர் – ஆனால் படத்தின் நாயகன் விஜய் மௌனம் காப்பது ஏன்? – தளபதியை விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. தியேட்டரில் வெளியாகாத ஒரு படம் இப்படி நேரடியாக இணையத்தில் வெளியானது பெரிய அதிர்வலைகளை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிரஞ்சீவி விஷால் சூர்யா ஜீவா என பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை ஜனநாயகன் படத்தின் நாயகன் விஜய் இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து வருகிறார். இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, இப்போது கிடைத்த முதல்கட்ட தகவலின்படி விருகம்பாக்கம் எடிட் சூட்டில் இருந்துதான் படத்தின் புட்டேஜ் கசிந்து இருப்பதாக தகவல்கள் வந்தன.

- Advertisement -

அதே நேரம் அந்த எடிட் சூட்டில் அனைவரும் சென்று விட முடியாது. படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் எடிட்டர் எடிட்டரின் உதவியாளர் என 6 பேருக்கு மட்டும் தான் அங்கு செல்ல அனுமதி உள்ளது. அதனால் அங்கிருந்து படத்தின் புட்டேஜ் கசிந்திருக்க வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் உறுதியாக நம்புகிறார்கள். ஜனநாயகன் படத்தை லீக் செய்ததற்கான காரணம் என்ன என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கிறது.

அது ஜனநாயகன் படத்தை மட்டும் அழிக்கும் நோக்கமா? அல்லது விஜயின் அரசியல் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்பது நோக்கமா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஆனால் சிலர் இந்த படத்தை லீக் செய்ததே விஜய் தான் என்று கூறி வருகின்றனர். நன்றாக யோசித்துப் பார்த்தால் ஜனநாயகன் படத்தை விஜய் லீக் செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது?

- Advertisement -

படம் தியேட்டருக்கு வர வேண்டும். பெரிய அளவில் வெற்றியடைய வேண்டும். நான் தான் கடைசி படத்திலும் வசூல் சக்ரவர்த்தி என்ற பெயரோடு அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் விஜயின் நோக்கம். அப்படி இருக்கும்போது அவர் எப்படி திருட்டுத்தனமாக இந்த திரைப்படத்தை வெளியிடுவார்? இதுகுறித்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோ விஜய் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். ஏற்கனவே படத்தை லீக் செய்ததே விஜய் தான் என பலவிதமான வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜய் எந்தவிதமான கருத்தையோ அறிக்கையோ வெளியிடாமல் மௌனமாக இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதே புரியவில்லை என வலைப்பேச்சு பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்