நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது தலைவன் தலைவி படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார். விரைவில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளர் பணியை மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனரான அறிமுகமான படம் பீனிக்ஸ் விழான். இந்த படத்தில் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமானார். ஆக்சன் களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் ஓரளவுதான் கவனம் பெற்றது.
குறிப்பாக சண்டை காட்சிகளை மையப்படுத்திய இந்த படத்தில் ஆக்சன் கேரக்டரில் சூர்யா சேதுபதி ரசிகர்களை கவரும் விதமாக நடித்திருந்தார். ஆனால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படங்கள் குறித்து அவரது தந்தை விஜய் சேதுபதி கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.
கடந்த சில வாரங்களாக தனது மகன் சூர்யாவுக்காக விஜய் சேதுபதி கதைகள் கேட்டு வருகிறார். தனது மகன் நடித்த முதல் படத்தில் எந்த அக்கறையும் காட்டாத அவர், 2வது படத்தின் கதையை அவரே கேட்டு முடிவு செய்ய முன்வந்திருக்கிறார். தனது மகனும் ஒரு பெரிய நட்சத்திர நடிகராக வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் பீனிக்ஸ் விழான் படம் வணிக ரீதியாக தோல்வி படம்தான். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் பீனிக்ஸ் விழான் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை நடிகர் விஜய் சேதுபதியே வாங்கி விட்டார். அதாவது தயாரிப்பாளருக்கு இதன்மூலம் நடிகர் விஜய் சேதுபதி, நஷ்டத்தில் இருந்து உதவியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் வரும்போது முதலில் சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து தாக்குபிடித்து நிற்க முடியும். இல்லாவிட்டால் சில படங்களிலேயே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தனது மகன் அப்படி வாய்ப்பின்றி போய்விடக் கூடாது என்பதால் விஜய் சேதுபதி சூர்யாவுக்காக கதைகளை ஆர்வமாக கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





