- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் வாரத்திலேயே பிக்பாஸ் போட்டியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுத்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி - எந்திரிச்சு நின்னு...

முதல் வாரத்திலேயே பிக்பாஸ் போட்டியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுத்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி – எந்திரிச்சு நின்னு பேசுங்க, உட்கார்ந்துட்டே தூங்காதீங்க எனவும் கிண்டல்! கமலையே மிஞ்சிட்டாரே?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இப்போது செயல்பட்டு வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த 8வது சீசனில் இருந்து விஜய் சேதுபதியை தொகுப்பாளராக நியமனம் செய்திருக்கின்றனர். காரணம், கமல்ஹாசன் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து இந்த முறை ஒதுங்கிக்கொண்டார்.

இந்த சூழலில், கமல் அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்வாரா என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஏனெனில் கமல் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பெற்ற சுவாரசியமான அனுபவங்களை எல்லாம் அவ்வப்போது வெளிப்படுத்தி அசத்துவார். புத்தக பரிந்துரை செய்வார்.

- Advertisement -

கமல்ஹாசன் பல விதங்களிலும் தன்னுடைய நவரச பாவனைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துபவர். அதனால் போட்டியாளர்களை பாராட்டுவது போல் கிண்டலடிப்பார். கலாய்த்து தள்ளுவார். வாழைப்பழத்தில் ஊசி செருகுவது போல் வார்த்தைகளில் விளையாட்டு காட்டுவார். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சுவாரசியமாக இருந்தது.

ஆனால் விஜய் சேதுபதி அந்தளவுக்கு தாக்குப் பிடித்து நிகழ்ச்சியை கொண்டு செல்வாரா என்று பார்வையாளர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், பிக்பாஸ் துவக்க நாளிலேயே, நடிகர் ரஞ்சித்தை நாசூக்காக வெறுப்பேற்றி, வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். சாப்பிட்டீங்களா, எங்க ஊர்ல கேட்போம் என்று ரஞ்சித் நண்பர் சொன்னதுக்கு, எங்க ஊர்ல மட்டும் வெளியே போன்னு சொல்லுவோமா என்று கேட்டு கலாய்த்தார்.

- Advertisement -

நேற்று முதல் வார சனிக்கிழமையன்று போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, பல இடங்களில் போட்டியாளர்களை நேருக்கு நேராக விமர்சித்தார். டூருக்கு வந்திருக்காங்களா, எந்த பிரச்னைக்கும் போகாம நல்ல பிள்ளையா இருந்துட்டு போலாமுன்னு வந்திருக்கீங்களா, விளையாட வந்துட்டு சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து தூங்கறாங்களா என்றும் கேள்வி எழுப்பினார். ஒரு கட்டத்தில் எந்திரிச்சு நின்னு பேசுங்க, உட்கார்ந்துட்டே மந்தமா தூங்கறீங்க என்றும் கிண்டலடித்தார்.

குறிப்பாக ஜாக்குலின், ரவீந்தர், ரஞ்சித், அருண் பிரசாத், ஆனந்தி என பலரையும் கேள்வி மேல் கேள்வியாக கேட்டார், அவ்வப்போது அவர்கள் சொன்ன விஷயங்களை வைத்தே, கிண்டலடித்தார். நீங்க புரியற மாதிரி எனக்கு பதில் சொல்லலைனா, திரும்ப திரும்ப கேள்வி கேட்பேன். வந்தவுடனே எல்லாருகிட்டேயும் அன்பா பேசிட்டு இருக்கீங்களே என கலாய்த்தார். இப்படி முதல் வாரத்தில் விஜய் சேதுபதியின் தொகுப்பை பார்த்து பார்வையாளர்கள் அசந்து போய்விட்டனர்.

- Advertisement -

சற்று முன்