- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயசேதுபதி திடீர் அமெரிக்கா பயணம், அங்கே அப்படி ஒரு தரமான சம்பவம் நடக்கப் போகுதா?...

நடிகர் விஜயசேதுபதி திடீர் அமெரிக்கா பயணம், அங்கே அப்படி ஒரு தரமான சம்பவம் நடக்கப் போகுதா? – வெளிநாட்டிலும் மக்கள் செல்வனுக்கு மகாராஜா வரவேற்பு தான்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதிக்கு இப்போது ஏறுமுகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களில் அவரது நடிப்பை ரசிகர்கள் ரசிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு, அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். அதற்கு வட்டியும் முதலுமாக தனது 50வது படம் மகாராஜா படத்தில், பெரிய கம்பேக் கொடுத்து அசத்தி விட்டார் விஜய் சேதுபதி.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம், கண்டிப்பாக தீபாவளிக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இனியும் தாமதிக்காமல் தீபாவளிக்கு தந்துவிடும் முடிவுக்கு வெற்றிமாறனே வந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படமும் ஏறக்குறைய படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரித்துள்ளார். மேட்டுப்பாளையம் – சென்னை வழித்தட ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய இந்த திரைக்கதை, மிஷ்கின் இயக்கத்தில் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஜா படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதிக்கு இந்த படம், மீண்டும் ஒரு திருப்புமுனையை அவரது சினிமா பயணத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்த படம் குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமாத்துறை சார்ந்தவர்களே வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், அமெரிக்காவில் இம்மாதம் 27ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை திரைப்பட விழா நடத்தப்படுகிறது. 27ம் தேதி துவங்கிய இந்த திரைப்பட விழாவில் நான்காம் நாளான நாளை, ( 30ம் தேதி( விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படமும் திரையிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமொிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த திரைப்பட விழா நடந்து வருகிறது.

அதனால் அமெரிக்கா செல்லும் நடிகர் விஜய் சேதுபதி, அந்த திரைப்பட விழாவில் பங்கேற்று, அங்குள்ள பார்வையாளர்களுடன் அமர்ந்து மகாராஜா படத்தை பார்க்கிறார். அங்குள்ள விழா ஏற்பாட்டாளர்கள், ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார். மேலும், விடுதலை 2 டீ ஏஜிங் தொழில்நுட்ப பணிகளும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வருவதால், அதிலும் விஜய் சேதுபதி பங்கேற்கிறார். ஆக, டூ இன் ஒன் வேலையாக மகாராஜா, விடுதலை 2 படங்களுக்காக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

- Advertisement -

சற்று முன்