- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னை இயக்கும் இயக்குனர்களிடம் அப்படி ஒரு கோரிக்கை வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி - அந்த...

தன்னை இயக்கும் இயக்குனர்களிடம் அப்படி ஒரு கோரிக்கை வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி – அந்த படம் தந்த பாதிப்பாக இருக்குமோ…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ரூ. 250 முதல் ரூ 400 வரை தினசரி சம்பளம் வாங்கிய துணை நடிகராக இருந்தவர்தான் விஜய் சேதுபதி. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் கதாநாயகனாக மாறினார். பல வெற்றிப் படங்களை தந்த அவர் இப்போது ரூ. 10 கோடிக்கு மேல் ஒரு படத்தில் நடிக்க சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

கடந்தாண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா அவரது 50வது படம். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. சீனாவிலும் ரிலீஸ் செய்யபப்ட்ட மகாராஜா படம் அங்கும் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தில் ஒரு பாசக்கார தந்தையாக விஜய் சேதுபதி நடிப்பு வேற லெவலில் இருந்தது.

மகாராஜா படத்துக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின், மலேசியாவில் எடுக்கப்பட்ட ஏஸ் என்ற படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

நடிகர் விஜய் சேதுபதியை பொருத்த வரை எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலைஞர். ஹீரோவாக மட்டுமின்றி பேட்ட விக்ரம் மாஸ்டர் ஜவான் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இமைக்கா நொடிகள் கடைசி விவசாயி ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் கேமியோ ரோலும் செய்திருக்கிறார்.

சமீபகாலமாக தனது படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் அவர் கதை சொல்லும் போதே, நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கோரிக்கையை வைக்கிறார். படம் ஆக்சன் கதையாக இருந்தாலும் காதல் கதையாக இருந்தாலும் அதில் அம்மா அக்கா மகள் போன்ற சென்டிமென்ட் காட்சிகள் கட்டாயம் வேண்டும் என்று கேட்கிறார்.

இதுபோன்ற சென்டிமென்ட் காட்சிகள் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடும் என்பதால், படத்தில் அப்படிப்பட்ட சில சென்டிமென்ட் காட்சிகளாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி கூறி விடுகிறார். அவர் நடித்த மகாராஜா படம் மற்றும் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படங்களின் சென்டிமென்ட் காட்சிகளால் மக்கள் செல்வன் இந்த மனநிலைக்கு மாறிவிட்டார் எனத் தெரிகிறது.

சற்று முன்