- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தான் கூப்பிட்டாங்க, அப்புறம் வில்லனா நடிக்க வெச்சுட்டாங்க - பத்தா...

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தான் கூப்பிட்டாங்க, அப்புறம் வில்லனா நடிக்க வெச்சுட்டாங்க – பத்தா பட வெற்றி விழாவில் குற்றம் சாட்டிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

இயக்குனர் பாலாஜியின் தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த பத்தா படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் இதுவரை ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1980களில் கதை நடப்பது போல பீரியட் கதைக்களமாக உள்ளது.

பத்தா படத்தின் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, எனக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. வழக்கமாக நான் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் எனக்கு இப்படி காய்ச்சல் வரும். இப்போது பத்தா படத்தின் வெற்றியால் நான் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

- Advertisement -

மக்களுக்கு ஒரு படம் பிடித்து விட்டால் அதை சமூக வலைதளங்களிலும் கொண்டாடி தீர்ப்பார்கள். பத்தா படத்திற்கு கிடைக்கும் இந்த அன்பை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. பாலாஜி தரணிதரன் மிகச்சிறந்த இயக்குனர். ஆனால் அவரது முந்தைய படம் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை.

அப்படிப்பட்ட சூழலில் அட்லி முன்வந்து இந்த படத்தை தயாரித்தார். யாரையும் குறை சொல்வதற்காக நான் இதை சொல்லவில்லை. ஆனால் வியாபாரம் என்று வரும்போது உண்மையை வெளிப்படையாக பேச வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லோரும் நான் மிக எளிதாக நடித்து விடுவதாக சொல்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல. நான் ரத்தம் கக்கி நடிக்கும் அளவுக்கு செய்யவில்லை என்றாலும் நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அந்த அளவுக்கு உழைப்பை தருகிறேன். என்னை படத்தின் கதாநாயகன் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். ஆனால் என்னை வில்லனாக்கி சிறுவன் சாயை ஹீரோவாக்கி விட்டார்கள். உண்மையில் அவர் முற்றிலும் தகுதியானவர்.

சாய் இப்போது பெற்று வரும் அனைத்து அன்பிற்கும் பாராட்டுகளுக்கும் முழு தகுதியானவர். அட்லி ஒரு பெரிய இயக்குனர். ஆனாலும் அவர் இந்த படத்தை களத்தில் இறங்கி நேரில் மக்களிடையே விளம்பரப்படுத்தி வருகிறார். அவரே நேரடியாக திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்திக்கிறார். அந்த மாதிரியான உழைப்பு சாதாரண விஷயம் இல்லை. அது மிகப் பெரிய விஷயம் என்று விஜய் சேதுபதி அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்