- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க; பிக்பாஸ் போட்டியாளரை மேடையில் எச்சரித்த நடிகர் விஜய் சேதுபதி!

இந்த வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க; பிக்பாஸ் போட்டியாளரை மேடையில் எச்சரித்த நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் 10வது சீசன் 70 நாட்களாக நடந்து வருகிறது. இதில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்கு வந்து வீட்டில் உள்ள பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்து பேசுகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு திமிராக பதில் அளித்த ஜேசன் ஆடியன்ஸை பார்த்து உடல்மொழியால் ஆட்டிட்யூட் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடுப்பான விஜய் சேதுபதி, ஜேசன் இங்கே இந்த உடல் மொழி எல்லாம் தேவையில்லை. காத்துல படம் வரைற வேலை எல்லாம் வேண்டாம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. இந்த வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க என்று போட்டியாளர் ஜேசனை விஜய் சேதுபதி எச்சரித்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்