- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியாவில் சிறந்த 10 ஹீரோக்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த நடிகர் விஜய் - நம்பர்...

இந்தியாவில் சிறந்த 10 ஹீரோக்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த நடிகர் விஜய் – நம்பர் 1 ஹீரோ அவரா? விரக்தியடைந்த தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

இந்திய சினிமாவில் டாப் 10 ஹீரோக்கள் யார் என்பது குறித்த பட்டியல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதில் தளபதி விஜய் முதல் இடத்தை இழந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. மக்களையும் சினிமாவையும் இனி பிரித்துப் பார்க்க முடியாது என்கிற சூழலில் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் மீது ரசிகர்கள் அளவு கடந்த அன்பும் ஆர்வமும் காட்டுகின்றனர்.

நமது நாட்டில் தங்கள் அபிமான நடிகர்களை ஆட்சி அரியணையில் ஏற்றி வைத்து முதல்வராக அழகு பார்க்கும் பழக்கமும் நீண்ட காலமாக தொடர்கிறது. அந்த வகையில் என்டிஆர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் இப்போது தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள விஜய் வரை இது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் டாப் நடிகர்கள் குறித்து ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதாவது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பிரபலமான நடிகர்கள் குறித்து ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் பட்டியல் தந்துள்ளது. இதில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த இப்போதைய தமிழக முதல்வர் விஜய் 4ம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த நடிகர் விஜய் இப்போது 4ம் இடத்துக்கு கீழே வந்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஆன பிறகு விஜயின் சினிமா செல்வாக்கு சரிந்தது அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

- Advertisement -

பாகுபலி நடிகர் பிரபாஸ் இந்த டாப் 10 பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் இருந்த இடத்தை நடிகர் பிரபாஸ் பிடித்துள்ளார். அடுத்து ஷாருக்கான் 2ம் இடத்தை பிடித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜூன் 3வது இடத்திலும் 4வது இடத்தில் நடிகர் விஜய், அடுத்தபடியாக நடிகர் மகேஷ்பாபு 5வது இடத்திலும் நடிகர் ரன்வீசிங் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் நடிகர் ராம்சரண் 7வது இடத்தில் உள்ளார். நடிகர் சல்மான்கான் 8வது இடத்தில் உள்ளார்.

அடுத்து 9வது இடத்தில் நடிகர் அக்சய் குமார் உள்ளார். 10வது இடத்தில் ஜூனியர் என்டிஆர் உள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த பட்டியல் இந்தியா முழுவதும் தென்னிந்திய நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பான் இந்தியா படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்