- Advertisement -
Homeபொழுதுபோக்குநண்பா… ஒரு டவுட்டு… இதென்ன சும்மா வந்த கூட்டமா? எங்க போனாலும் அப்படி சொல்றாங்க -...

நண்பா… ஒரு டவுட்டு… இதென்ன சும்மா வந்த கூட்டமா? எங்க போனாலும் அப்படி சொல்றாங்க – திருவாரூர் பிரசாரத்தில் மக்களிடம் கேள்வி எழுப்பிய நடிகர் விஜய்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்ற ஒரு அரசியல் தலைவராக மாறியிருக்கிறார். கடந்தாண்டில் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்குவதாக அறிவித்த நடிகர் விஜய் தொடர்ந்து கட்சிக் கொடி மற்றும் கொள்கை பாடலை வெளியிட்டார்.

அதன்பிறகு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற கிராமத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தினார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் தனது கட்சியின் 2வது மாநில மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார்.

- Advertisement -

இப்போது அடுத்தகட்டமாக நடிகர் விஜய் உங்க விஜய் நான் வரேன் என்ற டைட்டிலுடன் மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்கியிருக்கிறார். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சி அரியலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் விஜய் 2வது வாரத்தில் இன்று மதியம் நாகையிலும் மாலை திருவாரூரிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்கள் மத்தியில் பேசினார்.

நடிகர் விஜய் நடத்திய அரசியல் மாநாடுகளிலும் அவர் பங்கேற்கும் பிரசார பயணங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டு திடலில் திரண்டிருந்தனர். இப்படி ஒரு கூட்டம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இதுவரை திரண்டது இல்லை. நடிகர்கள் எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு மக்கள் கூட்டம் நடிகர் விஜய்க்கு தான் அதிகளவில் வருகிறது.

- Advertisement -

ஆனால் பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும், பிற அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், இந்த கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறாது. நடிகராக விஜயை பார்க்க வரும் மக்கள் கூட்டம் ஓட்டு அவருக்கு போடாது. அதனால் அவர் நினைப்பது போல் அந்த கூட்டம் எல்லாம் சும்மா அவரை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவாரூரில் மாலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெ தலைவர் விஜய், இதுகுறித்து பேசினார். பிரசாரத்தின் நிறைவில் விஜய் பேசுகையில், நண்பா ஒரே ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது சும்மா வெறும் கூட்டம். ஓட்டு போட மாட்டாங்கன்னு சொல்றாங்க. அப்படியா? இதென்ன சும்மா கூட்டமா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது அங்கிருந்த மக்கள் கூட்டம் இல்லே இல்லே டிவிகே டிவிகே என்று பதில் தந்தனர். அதைக் கேட்டு சிரித்த அவர், தேங்க்யூ தேங்க்யூ கோடான கோடி நன்றிகள் என்று சந்தோஷமாக கூறி நடிகர் விஜய் திருவாரூர் பிரசார கூட்டத்தை நிறைவு செய்தார்.

- Advertisement -

சற்று முன்