கோவையில் இன்று நடந்த 2ம் நாள் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, நேற்று நான் பேசும் போதே ஓட்டுக்காக இந்த கூட்டம் நடக்கவில்லை என்று சொன்னேன். வெறும் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி இல்லை இது. இங்கு மக்கள் பிரச்னைகளில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களின் நன்மைக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம். அதற்கு தயங்கவே மாட்டோம்.
கோவை சிறுவாணி தண்ணீர் போல சுத்தமான ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும். அது சுத்தமான அரசாக இருக்கும். ஊழல், மோசடி பேர்வழிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தைரியமாக மக்களை வாக்கு சாவடி முகவர்கள் தைரியமாக சந்திக்கலாம். அதனால் அறிஞர் அண்ணா சொன்னதை நான் இங்கு மேற்கோள் காட்டி சொல்கிறேன்.
மக்களிடம் செல். மக்களிடம் இருந்து கற்றுக்கொள். மக்களுடன் வாழ். மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. மக்களை நேசி. மக்களுக்காக சேவை செய். இதை நீங்க புரிஞ்சுக்கிட்டு செயல்பட்டால் உங்க ஊர் சிறுவாணி தண்ணீர் மாதிரி அவ்வளவு சுத்தமான ஒரு ஆட்சியாக இது அமையும்.
இன்னும் ஸ்ட்ராங்கா சொல்லணும்னா நம்முடைய தவெக வின் ஆட்சி ஒரு தெளிவான ஒரு உண்மையான வெளிப்படையான நிர்வாகம் செய்யக் கூடிய ஆட்சியாக இது அமையும். இதை மக்கள்கிட்ட நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும்.
இன்னொரு முக்கியெமான விஷயம் பூத்துக்கு வந்து ஓட்டுப் போடற மக்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும். அது உங்களுடைய கடமை. குடும்பம் குடும்பமாக கோவிலுகு்கு போற மாதிரி, குடும்பம் குடும்பமாக பண்டிகையை கொண்டாடற மாதிரி நமக்காக குடும்பம் குடும்பமா வந்து ஓட்டு போடற மக்களும் அதை கொண்டாட்டமாக செய்ய வேண்டும்.
அப்படி ஒரு மனநிலைை மக்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தவெக என்பது சாதாரண அரசியல் கட்சி இல்லை. இது ஒரு விடுதலை இயக்கம். கான்பிடன்டாக இருங்க நல்லதே நடக்கும் என்று கோவையில் 2ம் நாளாக இன்று நடந்த கூட்டத்தில் தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த இந்த கூட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.





