- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படம் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கிய பிரபல சேனல்; எத்தனை கோடி தெரியுமா? -...

தி கோட் படம் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கிய பிரபல சேனல்; எத்தனை கோடி தெரியுமா? – ஆனா விஜய் நடித்த படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்) ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஏற்கனவே சன்டிவி விலை பேசி வாங்கியது. ரூ. 52 கோடி இந்த படத்தை முதலில் வாங்கிய சன்டிவி, பிறகு விஜய் 69 படத்தை தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்த போது விஜய் சம்மதிக்காததால், அந்த படத்தை வாங்க மறுத்துவிட்டது.

அதே நேரத்தில், தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் தி கோட் படத்தை விற்பதிலும், வாங்குவதிலும் ஈகோ பிரச்னையும் இருந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சொன்ன விலை தரக்கூடாது என்றும், அவர்கள் கேட்கிற விலைக்கு கொடுக்க கூடாது என்றும் இரு தரப்பிலும் பணக்கார விளையாட்டும் நடந்துள்ளது.

- Advertisement -

பொதுவாகவே இப்போதைய சூழலில் டிவி சேனல்களும், ஓடிடி தளங்களும் படங்களின் உரிமத்தை விலைக்கு வாங்குவதில் முன்பிருந்ததை விட, தங்களது விலையை பாதிக்கு மேல் குறைத்து விட்டன. முதலில் சாதாரணமான ஒரு படத்தை மிக சுலபமாக 25 கோடி ரூபாய், 30 கோடி ரூபாய் என வாங்கிய டிவி சேனல்கள், ஓடிடி தளங்கள் இப்போது சில கோடிகளாக உரிமம் விலையை குறைத்து விட்டன.

இந்த சூழலில், தி கோட் படத்தை இப்போது ஜீ டிவி நிறுவனத்துக்கு, சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்டுள்ளது. ரூ. 75 கோடிக்கு தி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஜீ டிவி நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால் சன் டிவியை விட ரூ. 23 கோடி வரை கூடுதலாக ஜீ டிவி வாங்கியதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதாவது சன்டிவி நிறுவனம் இந்தி வெர்சன் தவிர்த்து, ரூ. 52 கோடிக்கு விலை பேசிய நிலையில், ஜீ டிவி இந்தி வெர்சன் சேர்த்து ரூ. 75 கோடி விலைக்கு உரிமத்தை வாங்கியுள்ளது. இதில் மற்றும் ஒரு முக்கிய விஷயமாக, சன் டிவி மொத்த தொகையை ஒரே முறையில் ரிலீஸ்க்கு முன்பே மொத்தமாக தந்துவிடும்.

ஆனால், ஜீ டிவி முதலில் ரூ. 10 கோடி ஒரு முழுத் தொகையும், பிறகு 16 தவணைகளில் மீதி மொத்த தொகையை மாதாமாதம் தயாரிப்பு நிறுவனத்துக்கு தரும் விதமாகவும் ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளது. அதனால் 16 மாதங்களுக்கு பிறகு ரூ. 75 கோடியும் தயாரிப்பு நிறுவனத்துக்கு மொத்தமாக வந்து சேரும். தமிழில் டாப் ஸ்டார் நடிகரான விஜய் நடித்த தி கோட் படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா, என்பதுதான் தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்