- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் - பதவியேற்பு விழா எப்போது? சென்னையில் எங்கே நடக்கிறது?...

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் – பதவியேற்பு விழா எப்போது? சென்னையில் எங்கே நடக்கிறது? – வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பரபரப்பான முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் ஆட்சியமைக்க இன்னும் 11 தொகுதிகள் தேவை என்கிற நிலையில் காங்கிரஸ் மற்றும் பாமக கட்சிகள் ஆதரவு தர வாய்ப்புள்ளது. அல்லது விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தரவும் அதிக வாய்ப்புள்ளது. தொங்கு சட்டசபை தான் இந்த முறை உருவாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக இப்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது.

- Advertisement -

தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் ஆட்சியமைக்க அழைக்குமாறு தமிழக ஆளுநரிடம் கடிதம் எழுதியுள்ள நிலையில் இன்னும் 2 வாரங்களில் 118 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜய் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்கிற தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.

அதே போல் முதல்வராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் 2ம் கட்ட தலைவராக உள்ள செங்கோட்டையன் ஆதவ் அர்ஜூனா புஸ்லி ஆனந்த் வெங்கட்ராமன் நிர்மல்குமார் சத்யபாமா உள்ளிட்ட சிலருக்கு முக்கிய அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படவும் அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதுதவிர இந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர்களை பாஜக தலைவர்களை தோல்வியடைய செய்த தவெக எம்எல்ஏக்களும் சில முக்கிய துறைகளை ஒதுக்கித் தந்து அவர்களையும் அமைச்சராக அறிவிக்க தலைவர் விஜய் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் சில முக்கிய துறைகளை முதல்வர் பொறுப்பில் வைத்துக்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் வருகிற 7ம் தேதி வியாழக்கிழமை நடிகர் விஜய் தனது கட்சி பரிவாரங்களுடன் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தமிழ் சினிமா துறை சார்ந்தவர் என்பதால் திரை நட்சத்திரங்கள் அதிகளவில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்