நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் 70 சதவீத படப்பிடிப்பு இப்போது முடிவடைந்திருக்கிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த படத்துடன் நடிப்பை விட்டு விலகுவதாக ஏற்கனவே விஜய் அறிவித்து விட்டார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்புக்குரியதாக இருந்தாலும், இனி சினிமாவில் அவர் நடிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
இப்போது விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன், தெலுங்கில் 2 ஆண்டுகளுக்கு முன் பாலய்யா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீ மேக் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய் கூறியதாவது, இன்று ஒரு காட்சியில் நடிக்கிறோம். அப்போது இந்த காட்சியில் நன்றாக நடித்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால் படம் வெளியான பிறகு பார்க்கும் போது, இன்னும் இதை விட பெட்டராக செய்திருக்கலாம் என்று தோன்றும்.
இப்படிதான் நான் நடித்த படங்களில் எனக்கு தோன்றி இருக்கிறது. எந்த ஒரு ஷாட்டுமே பர்பெக்ட்டாக பண்ணி இருக்கிறேன் என்று எனக்கு இதுரை எனக்கு தோன்றியதே இல்லை. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நான் இதற்காக ஸ்பெஷல் பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. நடிப்பு பயிற்சி எல்லாம் பெறவில்லை.
ஆனால் சினிமா சண்டை காட்சிகளுக்காக மட்டும் 6 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் கராத்தே குங்பூ மாதிரியான பயிற்சி அல்ல. சினிமா சண்டை காட்சிகளுக்கான பயிற்சி மட்டும்தான். மற்றபடி நடிப்பு, டான்ஸ் என்று எந்த கோர்ஸ்சும் செய்யவில்லை என்று பழைய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





