- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - புகழஞ்சலி செலுத்தும்...

இன்று சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் – புகழஞ்சலி செலுத்தும் அவரது கோடானு கோடி ரசிகர்கள்!

- Advertisement -

நீ பொட்டு வெச்ச தங்கக்குடம் ஊருக்கு மணிமகுடம் என்ற பாடல் வரிகள் ஒலிக்கும் போதெல்லாம் மக்களின் மனதில் சொக்கத்தங்கமாக வாழ்ந்து மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் சிரித்த முகம் தோன்றி மறையும். ஒரு மனிதராக நடிகராக அரசியல் தலைவராக மனிதநேயம் மிக்க ஒரு பண்பாளராக வாழ்ந்து மறைந்தவர் விஜயகாந்த். கடந்த ஆண்டில் இதே நாளில் டிசம்பர் 28ம் தேதி அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அழகர்சாமி – ஆண்டாள் தம்பதிக்கு மகனாக 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தவர் விஜயகாந்த். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் விஜயராஜ். சிறிய வயதிலிருந்தே சினிமா மீதும் நடிகர் எம் ஜி ஆர் மீதும் அதிக ஆர்வம் கொண்ட விஜயராஜ் இனிக்கும் இளமை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து தூரத்து இடி முழக்கம் என்ற படம் மூலம் அவர் நாயகனாக மாறினார். பிறகு இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1981ம் ஆண்டில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஆக்சன் அதிரடி படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். கடந்த 1980, 90களில் அதிக படங்களில் நடித்தார்.

குறிப்பாக ஊமை விழிகள் அம்மன் கோவில் கிழக்காலே புலன்விசாரணை வைதேகி காத்திருந்தாள் பூந்தோட்ட காவல்காரன் கேப்டன் பிரபாகரன் வானத்தைப்போல ரமணா போன்ற பல வெற்றிப் படங்களில் 150 படங்களுக்கு மேல் விஜயகாந்த் நடித்திருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் சங்கத்தின் கடன் சுமையை தீர்க்க மலேசியா சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளில் நட்சத்திர கலை இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கிடைத்த பெரும் தொகையில் நடிகர் சங்க கடனை அடைத்தார்.

- Advertisement -

மேலும் நலிவுற்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் பென்சன் திட்டத்தையும் அமல்படுத்தி அதற்கான ஒரு பெரும் தொகையையும் வங்கியில் டெபாசிட் செய்தார். சினிமாவில், நடிகர் சங்கத்தில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்த விஜயகாந்த் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடு நடத்தி அங்கு தனது அரசியல் இயக்கம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்து அரசியலிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டார்.

தன்னுடைய பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து அன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்று வாழ்ந்த மனிதர். மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பிறகு சினிமா துறையிலும் பொது வாழ்விலும் மிகப்பெரிய உதவிகளை செய்து மக்களின் மனதில் வாழ்ந்தவர் கருப்பு எம்ஜிஆர் என்றும் விஜயகாந்த் அழைக்கப்பட்டார். கடந்த ஆண்டு இதே நாளில் மறைந்த விஜயகாந்தின் நினைவு தினத்தில் அவரது கோடான கோடி ரசிகர்களும் தொண்டர்களும் கண்ணீர் மல்க தங்களது புகழஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்