- Advertisement -
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஒரு நேர்காணலில் கூறியதாவது, விஜயகாந்த் ஆபீஸ்க்கு டெய்லி டிபன் சாப்பிட ஆளுங்க வருவாங்க. நான் அவர்கிட்ட ஏன் இப்படி உதவி செய்கிறீர்கள் என்று கேட்டேன். மனுஷனுக்கு மட்டும் தான் கொடுத்து வாழ தெரியும். மிருகம் எடுத்து சாப்பிடும். நாம் மனுஷனா இருக்கோம். மத்தவங்களுக்கு கொடுத்து வாழணும்ன்னு சொன்னார். அவர் அப்படி சொன்ன உடனே எனக்கு கண்ணு கலங்கிடுச்சு. சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை திறந்தார். ஒரு பைசா கூட வாங்க மாட்டாங்க. எல்லாமே இலவசம். ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்பிடலுக்கு கேப்டன் கதர் வேட்டி சட்டை சாதாரண ரப்பர் செருப்பு போட்டுட்டு வந்து ஆயிரம் 10ஆயிரம் ரூபாய்க்கு கல்விக்காக பணமில்லாத ஏழை மாணவர்களுக்கு செக் எழுதி கொடுத்துட்டே இருப்பார். நான் அதை நேரில் பார்த்தேன் என்று ஜாக்குவார் தங்கம் கூறியிருக்கிறார்.





