- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் போடும் கணக்கு புரியாமல் தவிக்கும் கட்சித் தொண்டர்கள் - நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினருக்கு...

நடிகர் விஜய் போடும் கணக்கு புரியாமல் தவிக்கும் கட்சித் தொண்டர்கள் – நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினருக்கு விஜய் போட்ட உத்தரவு

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், வருகிற 2026 நடக்க உள்ள சட்டசபை தேர்தலை குறிவைத்து இருக்கிறார்.ஏற்கனவே பலமுறை ஆட்சி செய்த, இப்போதும் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கிற திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க வேண்டும், பலமுறை ஆட்சி அதிமுக மீண்டும் அரியணை ஏறாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் விஜயின் இலக்கு. திமுக, அதிமுக என்ற 2 ஜாம்பவான்களை வீழ்த்திவிட்டு, தமிழக முதல்வராக வேண்டும் என்பதுதான் அவரது கனவு.

திமுக, அதிமுக இரண்டுமே அசுர பலம் பொருந்தியவர்களாக பண பலத்தில் இருக்கின்றனர். ஒவ்வொரு அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் பல நூறு கோடிகள் மதிப்பில் அசையும் சொத்துகளை, அசையா சொத்துகளை பினாமி பெயர்களில் அமுக்கி வைத்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதே போல் மூட்டை, மூட்டையாக கோடிகைள சம்பாதிக்கும் திட்டத்தில், எத்தனை கோடிகளை வேணடுமானாலும் தேர்தல் நேரத்தில் செலவு செய்ய தயாராக இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் நடிகர் விஜய், மக்கள் செல்வாக்கும் தன்மீதும் உள்ள அபிமானத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்குகிறார். அதிமுக, திமுக சாராத நடுநிலையாளர்கள், 18 வயது நிரம்பிய புது வாக்காளர்கள், அதாவது இளைய தலைமுறையினர், அதிமுக, திமுக ஆட்சியை பார்த்து வெறுத்துப் போன மக்கள் என, இவர்களது ஓட்டுகளால் தன்னால் அதிகளவில் வெற்றியை பெற முடியும் என நம்புகிறார்.

ஓட்டுக்கு துட்டு என்ற முறையை, இடைத்தேர்தல்களில் அறிமுகப்படுத்திய பெருமை, திமுகவையே சேரும். பின்னர் அதிமுகவும் அந்த வழியை பின்பற்ற துவங்கி விட்டது. ஜனநாயக தேர்தல் என்பது மாறி, பணநாயக தேர்தலாக மாறி விட்டது. யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். அது உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்தான். ஓட்டை மட்டும் எங்களுக்கு போட்டு விடுங்கள் என சின்ன கட்சிகள், மக்களிடம் கோரிக்கை விடுப்பதும் தேர்தல் நேரங்களில் வழக்கமாகி விட்டது.

- Advertisement -

கை நீட்டி காசு வாங்கி விட்டு, அது 200, 300, 500, 1000 என தொகை எவ்வளவாக இருந்தாலும், பணம் கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்தால் பழிவந்துவிடும் என்று பயந்து, தனக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் அந்த கட்சிக்கு ஓட்டு போடும் பாமர மக்களும் இருக்கவே செய்கின்றனர். அதே போல் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஓட்டே போடாமல் விடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தராதீர்கள். எந்த கட்சி குறித்து யாரிடமும் விமர்சனம் செய்து பேசாதீர்கள். கப்சிப் என்று கமுக்கமாக இருந்துவிடுங்கள் என்று புஸ்லி ஆனந்த் மூலமாக தனது கட்சியினருக்கு உத்தரவாக கூறியிருக்கிறார். அப்படி என்றால், இந்தியாவை யார் ஆள வேண்டும் என்ற உரிமை, தமிழக வாக்காளர்களாகிய எங்களுக்கு இல்லையா, தமிழக சட்டசபையில் மட்டுமின்றி, திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு செல்வதை தடுப்பதும் முக்கியம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்