- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித், சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க போகும் கமல்ஹாசன் திரைப்படம்... அசுர வேகத்தை காட்டி அசத்தும்...

அஜித், சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க போகும் கமல்ஹாசன் திரைப்படம்… அசுர வேகத்தை காட்டி அசத்தும் படக்குழு… ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகம்…

- Advertisement -

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் அவ்வளவு எளிதாக என்று திரைப்படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பதில் தயாரிப்பு பணியில் மீண்டும் ஈடுபட ஆரம்பித்தார். அதன்படி சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை அவர் தயாரித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ராணுவ பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

 

- Advertisement -

இதே போல் சிம்பு தேசிங்கு பெரியசாமி இணையும் திரைப்படத்தையும் கமல்ஹாசனே தயாரிக்கிறார். இது வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இப்படியான சூழலில் தான் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அதில் அவர் மணிரத்னத்துடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

- Advertisement -

1987 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் நாயகன் திரைப்படம் வெளியானது. இன்று வரை ரசிகர்களின் மிகவும் ஃபேவரைட் திரைப்படமாக நாயகன் உள்ளது. இந்த நிலையில் 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த இணை இணைந்து இருக்கிறது. படத்திற்கு தக் லைப் என பெயர் வைக்கப்பட்டது அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

 

இதன் அறிவிப்பு வீடியோவில், தாடி மீசை நீண்ட முடியுடன் காட்சியளித்த கமல்ஹாசன், தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நெல்லை தமிழில் அவர் பேசியது பலரையும் இருப்பது ஈர்த்தது. கமல்ஹாசன் மட்டுமில்லாமல் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், நாசர், அபிராமி உள்ளிட்டோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் படத்திலிருந்து விலகினர். அவர்களுக்கு பதில் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் படத்தில் இணைந்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்து வருகிறார். மக்களவைத் தேர்தல் சமயத்திலேயே இதன் சூட்டிங் தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் காட்சிகளை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.

 

டெல்லி, ஜெய்சல்மார், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அண்மையில் கமல்ஹாசன், சிம்பு அசோக்செல்வன் இடையிலான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. கிட்டத்தட்ட 75% பணிகளை மணிரத்னம் இந்த படத்திற்காக முடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளி பண்டிகையை குறி வைத்து இருக்கின்றன. தற்போது இந்த பட்டியலில் கமலஹாசனும் சேர்ந்திருப்பது, தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது.

 

- Advertisement -

சற்று முன்