- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்நியன் 2 படம் குறித்து பேசிய நடிகர் விக்ரம், அட இவருக்கு அப்படி ஒரு ஆசை...

அந்நியன் 2 படம் குறித்து பேசிய நடிகர் விக்ரம், அட இவருக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா? – இதுகுறித்து ஷங்கர் இனியாவது யோசிப்பாரா?

- Advertisement -

நடிகர் விக்ரம் நடித்த படங்களில் பல வெற்றி படங்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவை. குறிப்பிட்ட படங்கள் அவரது சிறப்பான நடிப்பை ரசிகர்களுக்கு சொல்லியிருக்கின்றன. குறிப்பாக விக்ரம் நடிப்பில் வெளியான காசி, சேது, அந்நியன், ராவணன், சாமி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் விக்ரம் நடிப்பு பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது.

சமீபத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை, ஆதரவை பெற்ற படமாக அமைந்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் திரைக்கதை, கதை குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் விக்ரம் நடிப்பு படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது.

- Advertisement -

நடிகர் விக்ரம் துவக்கத்தில் சினிமா வாய்ப்புகள் இன்றி இருந்தார். அப்போது சில படங்களில் பின்னணி குரல் கலைஞராகவும் செயல்பட்டார். ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு பின்னணி பேசியது நடிகர் விக்ரம் தான். மேலும் பல தமிழ், தெலுங்கு படங்களில் துணை நடிகராகவும் விக்ரம் நடித்து வந்தார்.

இந்நிலையில் விக்ரமுக்கு டைரக்டர் பாலா சேது படம் மூலம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை சினிமா பயணத்தில் ஏற்படுத்தினார். இந்த படத்துக்கு பிறகு விக்ரம் நடித்த படங்கள், அவரை பெரிய அளவில் முன்னணி நடிகராக மாற்றியது. குறிப்பாக ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் அவரை கமர்சியல் ஹீரோவாக மாற்றி முன்னிலைக்கு கொண்டு வந்தது.

- Advertisement -

தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படமும் ஐ படமும் அதேபோல் காசி, ராவணன் போன்ற படங்களும் விக்ரம் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்காக கேரக்டருக்காக மெனக்கெடுவதும், உடலை வருத்திக்கொண்டு நடிப்பதும் நடிகர் விக்ரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், அந்நியன் 2 பாகத்தை ஷங்கர் இயக்கி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்து, நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாக்க நடிகர் சங்கர் முயற்சித்தார். அந்த படம் வந்திருந்தால் மிகவும் நான் ரசித்திருப்பேன். ஏனென்றால் ரன்வீர் சிங் மிகச்சிறந்த நடிகர். அவரது நடிப்பில் அந்நியன் கேரக்டரை பார்க்க மிகவும் ஆசைப்பட்டேன் என்று நடிகர் விக்ரம் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்