- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடையை அக்டோபர் 1ம் தேதி திறக்க … ஸாரி ரிலீஸ் செய்ய நாள் குறித்தது...

இட்லி கடையை அக்டோபர் 1ம் தேதி திறக்க … ஸாரி ரிலீஸ் செய்ய நாள் குறித்தது ஏன்? அட இப்படி ஒரு விஷயத்தை யாருமே கவனிக்கலையே…

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கி அவரே நாயகனாக நடித்த படம் இட்லி கடை. இந்த படம் தனுஷ் டைரக்‌ஷனில் வெளியாகும் 4வது படமாகும். ஏற்கனவே ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற 3 படங்களை அவர் டைரக்ட் செய்த நிலையில், ராயன் படம் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த பிளாக் பஸ்டர் மூவியாக இருந்தது.

தனுஷ் இயக்கிய முதல் படம் ப பாண்டி படம் ஓரளவு ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் அவரது 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் சரியாக போகவில்லை. இந்த சூழலில் இட்லி கடை படத்தை அவர் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் அருண்விஜய் நித்யா மேனன் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வருகிற 10ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இட்லி கடை படக்குழு திட்டமிட்டு ஏற்கனவே ரிலீஸ் தேதியை பகிரங்கமாக அறிவித்திருந்தது. ஆனால் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி வருவது உறுதியானதால் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் வரவேண்டிய இந்த படம் ஏறக்குறைய 6 மாதங்கள் கழித்து அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் என்பது தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதே நேரத்தில் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா படம் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் குட்பேட் அக்லி படத்தை தொடர்ந்து ரெட்ரோ தக்லைப் கூலி மதராஸி என சூர்யா கமல் ரஜினி சிவகார்த்திகேயன் என முன்னணி ஸ்டார்களின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின்றன. அத்துடன் அக்டோபர் 1ம் தேதிக்கு இட்லி கடை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதற்கும் முக்கிய காரணம் உள்ளது.

வருகிற அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை, அடுத்த நாள் வியாழன் காந்தி ஜெயந்தி சரஸ்வதி பூஜை 3ம் தேதி வெள்ளிக்கிழமை 4, 5ம் தேதிகளில் சனி ஞாயிறு என விடுமுறை தினங்களாக தொடர்ந்து 5 நாட்கள் வருவதால் அக்டோபர் 1ம் தேதி இட்லி கடையை திறந்தால் ஸாரி படத்தை ரிலீஸ் செய்தால் ஏகப்பட்ட வசூலை அள்ளிவிடலாம் என்பதும் படக்குழுவின் திட்டமாக உள்ளது.

சற்று முன்