நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக பெயரெடுத்தவர். இப்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். துவக்கத்தில் மற்ற நடிகர்களை போல தான் இவரது படங்களும் இருந்தன. ஆனால் இவரது உயரமும், நடிப்பும், குறிப்பாக சண்டை காட்சிகளில் இவரது ஆக்சனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டன.
தருண்கோபி இயக்கிய திமிரு படம்தான், விஷாலுக்கு நல்ல ஒரு அறிமுகத்தை கொடுத்தது. செல்லமே படமும் ஓரளவுக்கு ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம்தான், விஷாலுக்கு திருப்பு முனையாக அமைந்தது. ராஜ்கிரண் மகனாக, தென்மாவட்டத்துக்காரராக அசத்தலான நடிப்பை தந்திருப்பார்.
தொடர்ந்து பல படங்களில் நல்ல நடிப்பை தந்த விஷால், ஒரு கட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டார். வழக்கமாக ராதாரவி, சரத்குமார் போன்றவர்களே நீடித்த பதவிகளில் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றது, தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
துவக்கத்தில் நடிகராக மட்டுமே இருக்கும் வரை ஊடகங்களில் அவ்வப்போது ஒரு நடிகராக மட்டுமே விஷால் தெரிந்தார். ஆனால் நடிகர் சங்க செயலாளராக ஆன பின்பு அவர் மீது ஊடகங்களின் வெளிச்சம் அதிகமாக பாய்ந்தது. அவர் பேசிய பல விஷயங்கள் சர்ச்சை கருத்துகளாக அடிக்கடி விமர்சனங்களை சந்தித்தது. இதனால் ஒரு சர்ச்சை மனிதராக விஷால் ஒரு சமயத்தில் இருந்தார்.
சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்சனுக்காக மும்பை சென்சார் போர்டு அலுவலகம் சென்றவர், அங்கு 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து சென்ற வேலையை முடித்துவிட்டார். அதனால் அதற்கு பின் லஞ்சம் வாங்கியதாக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளை வீடியோ மூலம் போட்டுக்கொடுத்தார். இது மும்பை சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷால் மீது பாலிவுட் உலகம் கடுப்பில் உள்ளது.
இந்நிலையில் சமீபமாக விஷால் பொது இடங்களுக்கு சாப்பிட வந்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என மூன்று முறைப்படியும் பிரார்த்தனை செய்த பின்பே உணவில் கை வைக்கிறார். எம்மதமும் சம்மதம் என்பதை இப்படி சாப்பிடும் உணவின் முன்புதான் காட்ட வேண்டுமா, இது சேட்டையாக தெரிகிறது. இந்த பில்டப் செய்வது மிகையாக, செயற்கையாக உள்ளது என பலரும் அவரது சாப்பிடும் வீடியோக்களை பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





