- Advertisement -
Homeபொழுதுபோக்குயாருமே என்னை நம்ப மாட்டீங்களா? துப்பறிவாளன் 2 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால் -...

யாருமே என்னை நம்ப மாட்டீங்களா? துப்பறிவாளன் 2 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால் – பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க அடுத்த வாய்ப்பு

- Advertisement -

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவரது நடிப்பில் வெளிவந்த செல்லமே, சண்டக்கோழி, தாமிரபரணி, தோரணை, பூஜை, நான் சிவப்பு மனிதன், சிவப்பதிகாரம், மலைக்கோட்டை, துப்பறிவாளன், அவன் இவன், பாண்டியநாடு போன்ற பல படங்கள் மிகச் சிறந்த படங்களாக இருந்தன. நல்ல நடிகராக அதில் விஷால் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாகவும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இப்போது இருந்து வரும் நடிகர் விஷால், தொடர்ந்து முன்னணி நடிகராக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரது படங்கள் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்க ஆரம்பித்தன. அவர் நடித்த பல படங்கள் சரியாக போகவில்லை.

- Advertisement -

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக விஷால் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அதுதவிர தயாரிப்பாளர்களுடன் பிரச்னை, சினிமா சார்ந்து அவர் சொன்ன சில சர்ச்சைக்குரிய கருத்துகளால், அவரது கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார். இதற்கிடையே இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் துப்பறிவாளன் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்னை, விஷாலின் இமேஜை மேலும் டேமேஜ் ஆக்கியது.

இந்த சூழலில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம், விஷாலுக்கு கம்பேக் படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு 90 சதவீத காரணம், நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்த விஷால், மீண்டும் பழைய நிலைமைக்கே போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஒரு மாத படப்பிடிப்புடன் நின்றுபோன துப்பறிவாளன் 2 படத்தை நானே டைரக்ட் செய்து, நடிக்கிறேன் என விஷால் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்த நிலையில், மார்க் ஆண்டனி தந்த வெற்றிக்கு பிறகு, மீண்டும் அந்த பணியை ஆரம்பித்தார். லண்டனுக்கு சென்று லொக்கேஷன் எல்லாம் பார்த்துவிட்டு வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் துப்பறிவாளன் 2 படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளருமே நடிகர் விஷாலை நம்பி முன்வரவில்லை. காரணம், விஷாலுக்கு தமிழ் சினிமாவில் இப்போது மார்க்கெட் இல்லை. அது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களை கோர்ட், வழக்கு என அலைக்கழித்து, நம்பகத் தன்மையையும் இழந்துவிட்டார். அதனால் அவர் நடிக்கும், இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளருமே சம்மதிக்காத நிலையில், அந்த படத்தை விஷால் டிராப் செய்துவிட்டார். மேலும், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் விஷால் நடிக்க பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது. ஆனால் தயாரிப்பாளர் யாரென இன்னும் முடிவாகவில்லை.

- Advertisement -

சற்று முன்