- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷால் நடிக்கும் 34வது திரைப்படத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியானது!

விஷால் நடிக்கும் 34வது திரைப்படத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியானது!

- Advertisement -

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஷால் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வருகிறது. அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், நடிகர் விஷால் நடிக்கவுள்ள 34வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளன. நடிகர் விஷாலில் 34வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்கள் மெகா ஹிட் ஆகின.

இந்நிலையில், இயக்குநர் ஹரி நடிகர் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் விஷா டுவிட்டரில் பகிர்ந்துள்ள போஸ்டரை அவரது ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

சற்று முன்