- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது நான் நடித்திருக்க வேண்டிய படம்... கார்த்தியின் திரைப்படத்தை பார்த்து பொறாமையில் பொங்கிய நடிகர் விஷ்ணு...

அது நான் நடித்திருக்க வேண்டிய படம்… கார்த்தியின் திரைப்படத்தை பார்த்து பொறாமையில் பொங்கிய நடிகர் விஷ்ணு விஷால்…

- Advertisement -

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சுசீந்திரன். ஆரம்பத்தில் இயக்குனர் எழிலின் உதவி இயக்குனராக இருந்த அவர், தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார்.

கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை கொண்டாடினார்கள் ரசிகர்கள். நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் முதல் திரைப்படமான வெண்ணிலா கபடி குழு, மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதிலும் இறுதி காட்சியில், களத்திலேயே விஷ்ணு விஷால் மரணிப்பது போன்று காட்சி அமைத்து கலங்கடித்து இருந்தார் சுசீந்திரன்.

- Advertisement -

இதன்பிறகு கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல படத்தை சுசீந்திரன் இயக்கினார். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என இரண்டு படங்களில் நடித்திருந்த கார்த்திக்கு, இந்த திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. கல்லூரி வாழ்க்கையில் போதைப் பொருட்களின் உபயோகத்தால் தடம் மாறிப்போன நான்கு இளைஞர்களுக்கும், அவர்களால் குடும்பத்தில் தந்தையை இழந்த கார்த்திக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை மிகச் சரியாக காட்சிப்படுத்தியிருந்தார் சுசீந்திரன்.

முந்தைய திரைப்படத்தைப் போலவே இந்த படத்திலும் அழுத்தமான கிளைமாக்ஸை பதிவு செய்திருந்தார் சுசீந்திரன். இதைத் தொடர்ந்து, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட தரமான திரைப்படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இயக்குனர் சுசீந்திரன்.

- Advertisement -

ஆனால் ஜீவா திரைப்படத்திற்கு பிறகு சுசீந்திரனுக்கு எந்த ஒரு திரைப்படமும் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்றே கூறலாம். வில் அம்பு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், சாம்பியன், கென்னடி கிளப், ஈஸ்வரன், வீரபாண்டியபுரம் என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் படுதோல்வியையே சந்தித்தன. இப்படியான சூழலில் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு, ஜீவா என்று இரண்டு வெற்றி படங்களில் நடித்த விஷ்ணு விஷால், நான் மகான் அல்ல திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டி இருந்தது என்று கூறி பலரையும் கவனம் பெற வைத்துள்ளார்.

நான் மகான் அல்ல திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் விஷ்ணு விஷால், சுசீந்திரனுடன் இந்த படத்தில் இணைய போவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், விதி வேறொரு திட்டம் வைத்திருந்தது. அவ்வபோது நான் மகான் நல்ல படத்தில் நான் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருப்பேன் என அவர் பதிவிட்டுள்ளார். விஷ்ணு விஷால் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்