- Advertisement -
Homeபொழுதுபோக்குஒருநாள் பணக்காரனா இருப்பான், அடுத்த நாள் பிச்சைக்காரனா இருப்பான் - விடுகதை போல நடிகர் விவேக்...

ஒருநாள் பணக்காரனா இருப்பான், அடுத்த நாள் பிச்சைக்காரனா இருப்பான் – விடுகதை போல நடிகர் விவேக் சொன்னது யாரை தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். ஆரம்பத்தில் காமெடி மட்டுமே செய்தவர் ஒரு கட்டத்துக்கு பிறகு சமுதாயத்துக்கு தேவையான பல நல்ல கருத்துகளை சொல்ல ஆரம்பித்தார். குறிப்பாக நினைவிருக்கும் வரை படத்தில் இருந்து விவேக் சொன்ன சமூக கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

அதன்பிறகு அப்படியே தனது நடிப்பு பாணியை தொடர்ந்தார். தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு புரட்சி செய்தார். ஆனால் கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாளே திடீரென மறைந்து போனார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

விவேக்குடன் பல படங்களில் காமெடி செய்தவர் மயில்சாமி. கன்னிராசி படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் மளிகை பொருட்களை தலையில் கூடையில் வைத்து கொண்டு வரும் ஒரு காட்சியில் மயில்சாமி சிறுவனாக நடித்திருப்பார். எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகரான மயில்சாமி அவரது பாணியில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.

குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். கல்வி, மருத்துவம் என எந்த உதவி என்றாலும் ஓடோடி உதவி செய்பவர். தன்னிடம் பணம் இல்லாவிட்டால் பல நடிகர்களிடம் வாங்கி அந்த உதவியை செய்பவர். வாழும் காலம் வரை மற்றவர்களுக்கு உதவுவதை தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார்.

- Advertisement -

மறைந்த நடிகர் மயில்சாமி குறித்து ஒரு விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மயில்சாமி போல ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் உதவி செய்த போது, அவருக்கு தன் கழுத்தில் அணிந்திருந்த எம்ஜிஆர் டாலர் அணிந்த தங்க சங்கிலியை பரிசளித்தவர் மயில்சாமி.

மயில்சாமி சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்யவே செலவு செய்தார். ஒரு நாள் பணக்காரனாக இருப்பார். மறுநாளே பிச்சைக்காரனாக இருப்பார் மயில்சாமி. இதுதான் அவரது உண்மையான நிலை. தனக்கென எதுவுமே அவர் வைத்துக்கொண்டது இல்லை என்று ஒரு விழாவில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் மயில்சாமியும் மறைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்