- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான 3வது படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், எப்போ ரிலீஸ்...

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான 3வது படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், எப்போ ரிலீஸ் தெரியுமா? – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக, தயாரிப்பாளராக, பாடகராக உள்ள தனுஷ் இப்போது இயக்குனராகவும் மாறிவிட்டார். ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் ப பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், தொடர்ந்து இயக்கிய 2வது படம் ராயன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது தனுஷ் நடித்த 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இதுவரை நடித்த 50 படங்களில், 155 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய வசூலை எட்டியது ராயன் படம்தான். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை பெரிய பக்கபலமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது தனுஷ் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் 3வதாக இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

- Advertisement -

இந்த படத்தில் தனது அக்கா மகன் பவிஷ் என்பவரை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் நடிகர் அஜித்குமாருக்கு மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயன் படம் தந்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ், தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், சத்யராஜ் முக்கிய கேரக்டர்களின் நடித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் தனுஷ் 3வதாக இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் மேத்யூ தாமஸ், பிரியா வாரியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த கோல்டன் ஸ்பாரோ பாடல் பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வருகிற டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நடிகர் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமான இளையராஜா படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா படமும் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்