தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருப்பவர் நடிகர் விஜய். இன்றைய சூழலில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். சீனியர் நடிகர்கள் ரஜினி கமல் கூட இன்னும் அவர்களது சம்பளத்தில் ரூ. 150 கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லி படத்தில் கூட அஜீத்குமாரின் சம்பளம் ரூ. 163 கோடி என்றுதான் சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடுகின்றன. குறிப்பாக சமீபத்தில் வெளியான பீஸ்ட் வாரிசு லியோ தி கோட் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் விமர்சன ரீதியாக பெரிய திருப்தியை தரவில்லை. ஆனால் வசூலில் இந்த படங்கள் பட்டைய கிளப்பின.
கதை திரைக்கதை விஷயங்களை கடந்த விஜய் படங்களில் பாடல் காட்சிகளில் நடனம் சிறப்பாக இருக்கும். விஜயின் காமெடி பலரையும் ரசிக்க வைக்கும். மேலும் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை விஜய் படங்கள் தொடர்ந்து தருவதால் அவரது படங்களை காண குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் அதிகளவில் விஜய் படங்களை விரும்பி ரசித்து பார்க்கின்றனர். விஜயின் பாடல்களுக்கு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதனால் விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் பெரிய பலமாக இருந்து வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்க்கு சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. குறிப்பாக சுறா குருவி ஆதி வேலாயுதம் வேட்டைக்காரன் வில்லு போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை விஜய்க்கு தரவில்லை. இதற்கும் இந்த படங்களில் விஜய் ஆக்சன் கேரக்டரில் அசத்தலாக நடித்திருந்தார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் ஆரம்பத்தில் சூர்யாவை கதாநாயகனாக நடிக்க வைக்க போட்டோ ஷூட் நடந்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் சுறா வில்லு வேட்டைக்காரன் என தொடர்ந்து விஜய் தோல்வி படங்களை கொடுத்துள்ளார். அதனால் ஷங்கரிடம், தனது மகன் விஜயை வைத்து நண்பன் படத்தை எடுக்குமாறு விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டார். அதன் பிறகு சூர்யாவுக்கு பதிலாக நண்பன் படத்தில் விஜய் நடித்தார் என்ற ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





