- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் தந்த கதையை படமாக்கும் இயக்குனர் கௌதம் மேனன், அது தனுஷ் நடித்த படத்தின் கதை...

வெற்றிமாறன் தந்த கதையை படமாக்கும் இயக்குனர் கௌதம் மேனன், அது தனுஷ் நடித்த படத்தின் கதை தான் – டைட்டில் கூட செமையா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக பல வெற்றிப் படங்களை தந்தவர் கௌதம் மேனன். காக்க காக்க வாரணம் ஆயிரம் வேட்டையாடு விளையாடு விண்ணைத் தாண்டி வருவாயா என அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. தவிர நடிகராகவும் பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியவர் கௌதம் மேனன்.

திரைப்படம் இயக்குவது, சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களை சொந்தமாக தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டியவர் கெளதம் மேனன். இதில் சில படங்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்து தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு பலத்த பாதிப்பை தந்தது. இதனால் அவர் கடனாளியாகவும் மாறினார்.

- Advertisement -

அதனால்தான் அவர் தயாரித்து இயக்கிய துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் இன்னும் கிடப்பில் உள்ளது. துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. பிறகு சூர்யாவிடம் கௌதம் மேனன் கதை சொன்னார். ஆனால், நீங்கள் தயாரிப்பதாக இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என சூர்யா விலகிவிட, பிறகு விக்ரம் அந்த படத்தில் நடித்தார்.

திரைப்பட இயக்குனராக ரசிகர்களின் மனம் கவர்ந்த கௌதம் மேனன், தொடர்ந்து நடிப்பது படம் தயாரிப்பது போன்றவற்றில் ஈடுபடாமல் படங்களை டைரக்ட் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இதை புரிந்துக்கொண்ட கௌதம் மேனன் சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த ஒரு படத்தை இயக்கினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இப்போது தமிழில் ஒரு படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். ஆனால் இந்த படத்தின் கதை,கௌதம் மேனனுக்கு சொந்தமானது அல்ல. விடுதலை விடுதலை 2 படங்களில் நடித்த கௌதம் மேனனுக்கும் வெற்றிமாறனுக்கும் நல்ல நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில், வெற்றிமாறனிடம் கேட்டு அவரது கதை ஒன்றை வாங்கி அதை கௌதம் மேனன் டைரக்ட் செய்ய உள்ளார்.

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்துக்கு பிறகு, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் சூதாடி. 15 நாட்கள் மட்டுமே இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில் தனுஷூம் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் அப்படியே டிராப் ஆகி விட்டது. இப்போது அந்த சூதாடி படத்தின் கதையை இன்றையை சூழலுக்கு ஏற்ப மாற்றிதான், வெற்றிமாறன் கதையை கௌதம் மேனன் படமாக டைரக்ட் செய்ய உள்ளார். படத்தின் பெயர் சூதாடி என்று வைக்கப்படுமா, அல்லது டைட்டிலை கௌதம் மேனன் மாற்றுவாரா என விரைவில் தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்