சினிமாவை போல டிவி சீரியல் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அடையாளமும் கிடைத்து விடுகிறது. அதில் பிரபலமான சில நடிகர் நடிகைகள் பிஸியாக சீரியல்களில் நடித்துக்கொண்டு இருந்த போது திடீரென மரணமடைந்தனர். அவர்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சினிமாவில் அப்பா வில்லன் வக்கீல் போலீஸ் அதிகாரி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து. பிறகு எதிர்நீச்சல் என்ற டிவி சீரியலில் நடித்தார். ஆதிகுணசேகரன் என்ற அண்ணன் கேரக்டரில் இவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறறது. ஆனால் இந்த சீரியலில் நடித்துக்கொண்டு மாரிமுத்து, டப்பிங் பேச சென்றார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்தவர் விஜே சித்ரா. இந்த சீரியலில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது தனது அறையில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். இவர் தனது காதலனை திருமணம் செய்ய இருந்த போது இவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது. இது பெரிய அளவில் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வேதனை தந்தது.
ரஞ்சிதமே பொன்னி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் நேத்ரன். 25 ஆண்டுகளுக்கு மேலாக டிவி சீரியல்களில் நடித்தவர். இவர் ஒரு நடனக் கலைஞர். ரஞ்சிதமே சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த போது நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் பல மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நேத்ரனின் எதிர்பாராத மறைவு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது.
சிறகடிக்க ஆசை பனிவிழும் மலர் வனம் பாக்கியலட்சுமி போன்ற டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ராஜேஸ்வரி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிறகடிக்க ஆசை சீரியலில் அவர் நடித்து வந்த நிலையில் திடீரென தற்கொலை முடிவை அவர் எடுத்துவிட்டார். அவர் அதிகளவில் மாத்திரைகளை விழுங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
கௌரி என்ற சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். கர்நாடகாவை சேர்ந்த இவர் கன்னட மொழி நடிகை. கலைஞர் தொலைக்காட்சியில் கௌரி என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நந்தினி நடித்து வந்தார். பெங்களூருவில் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பெற்றோர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் திருமணம் செய்ய விருப்பமின்றில இந்த முடிவை நந்தினி எடுத்ததாக போலீஸ் தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நல்ல கலைஞர்களின் திடீர் மறைவு சீரியல் ரசிகர்களுக்கு பெரிய இழப்பாகி விட்டது.





