- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த ஜனநாயகன் படத்தை யாரும் பார்க்காதீங்க - சூர்யா சிரஞ்சீவி குஷ்பு உள்பட நடிகர்கள்...

விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை யாரும் பார்க்காதீங்க – சூர்யா சிரஞ்சீவி குஷ்பு உள்பட நடிகர்கள் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் தியேட்டர்களில் ரிலீஸாகாத நிலையில் இணையத்தில் நேற்று வெளியானது. முதலில் 5 நிமிட காட்சியும் அதைத் தொடர்ந்து படத்தின் மொத்த காட்சிகளும் இணையத்தில் வெளியானது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை குஷ்பூ கூறியதாவது, பைரசி என்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு திட்டமிட்ட திருட்டு. அதில் ஈடுபடுபவர்களை சாதாரண குற்றவாளிகளாக கருதக்கூடாது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது என்பது அதில் உழைத்த ஒவ்வொரு கலைஞர் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் நேர்ந்த கொடூரமான துரோகம். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் நியாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை. நீங்கள் சினிமாவை உண்மையாக மதித்தால் பைரசியை மறுப்பீர்கள். படைப்பாளிகளுடன் நில்லுங்கள். நேர்மையுடன் நில்லுங்கள் என்று நடிகை குஷ்பு தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஜனநாயகன் படம் துரதிஷ்டமாக இணையத்தில் கசிந்து இருப்பது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. சினிமா என்பது நம்பிக்கை கடும் உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இத்தகைய சம்பவங்கள் சினிமாவில் இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது.

மேலும் நமது படங்களை பாதுகாப்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நினைவூட்டுகிறது. இச்ச சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் குற்றவாளிகளை தண்டிப்பதிலும் கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் நாம் உறுதுணையாக நிற்போம். சினிமாவை மதித்து அதை பாதுகாப்பதுடன் நம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிப்போம். பைரசியை ஒழிப்போம். சினிமாவை காப்போம் என்று நடிகர் சிரஞ்சீவி அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஜனநாயகன் படம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, இதயத்தை நொறுக்கும் செயல். இது மிகவும் அநீதியானது. ஒரு முழு குழுவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இப்படி சிதைக்கப்பட்டு விட்டது. உங்கள் அனைவரிடமும் நான் நேர்மையுடன் ஒரு வேண்டுகோள் விடுகிறேன். தயவு செய்து ஜனநாயகன் திரைப்படத்தை பைரசியில் பார்க்காதீர்கள்.

ஜனநாயகன் படத்தை யாருக்கும் பகிராதீர்கள் அல்லது அதைப்பற்றி இங்கே விவாதிக்காதீர்கள். அவர்களின் கடின உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். நான் என் நண்பர்களின் பக்கம் இருக்கிறேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது என்று நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார். இதே போல் நடிகர்கள் விஷால் போஸ் வெங்கட் ஜீவா போன்ற பல நடிகர்கள் நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்