நடிகர் விஜய் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று சச்சின். கடந்த 2005ம் ஆண்டில் எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் பிபாசா பாஸூ வடிவேலு ரகுவரன் தாடி பாலாஜி சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதில் ஷாலினி என்ற கேரக்டரில் நடிகை ஜெனிலியாக நாயகியாக நடித்திருந்தார். விஜய்க்கும் அவருக்கும் அடிக்கடி ஏற்படுகிற மோதல்களும் ஈகோ பிரச்னையும் சண்டையும் சமாதானமும் என அந்த படம் இளம் வயதினரரை மிகவும் கவர்ந்த ஒரு படமாக அப்போதே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரத்தில் சச்சின் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 230க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சச்சின் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கில்லி படம் போலவே இந்த படமும் பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது.
அதன்படி கடந்த 18ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படம் இதுவரை ரூ. 15 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. கில்லி படத்தின் மொத்த வசூல் ரூ. 22கோடி என்ற நிலையில் சச்சின் அந்த வசூலை முறியடித்து அதிக வசூலை பெற்றுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே சச்சின் படத்தில் நாயகியாக நடித்த ஜெனிலியா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜெனிலியாக கூறியிருப்பதாவது, வணக்கம் தளபதி பேன்ஸ் எப்படி இருக்கீங்க? நான் உங்கள் ஷாலினி. அதே டபுள் ஐ ஷாலினி. 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சச்சின் படம் ரிலீஸாகி இருப்பது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் தளபதி என்ன ஸ்வீட் என்ன க்யூட்டாக இந்த படத்தில் இருக்கிறார். ரொம்பவும் பெருமையாக உள்ளது. அனைத்து தளபதி ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி.
தியேட்டர்களில் சச்சின் படத்தை ரசிகர்கள் ஒரு பண்டிகையாக கொண்டாடுவது பெரிய உற்சாகத்தை எனக்கு தருகிறது. அந்த வீடியோக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் இதயத்தை தொடும் ஒரு சந்தோஷமாக நான் அதை உணர்கிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி என அந்த வீடியோவில் நடிகை ஜெனிலியா கூறியிருக்கிறார்.





