- Advertisement -
Homeபொழுதுபோக்குநிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் கேரளாவுக்கு கை கொடுக்கும் தமிழ் நடிகர்கள்... நேற்று விக்ரம்... இன்று சூர்யா......

நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் கேரளாவுக்கு கை கொடுக்கும் தமிழ் நடிகர்கள்… நேற்று விக்ரம்… இன்று சூர்யா… அப்படி என்ன செய்தார் தெரியுமா…

- Advertisement -

கனமழையால் ஊரே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க, கடந்த 29ஆம் தேதி இரவு இப்படி ஒரு துயர சம்பவம் நடக்கும் என வயநாட்டு மக்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நாள் முழுவதும் இடைவிடாமல் பெய்த கனமழையின் தாக்கத்தால், இரவு நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட அது சில கிராமங்களையே காணாமல் ஆக்கிவிட்டது.

வயநாட்டில் ஏற்பட்டது ஏதோ ஒரு சாலையை மட்டும் மூடிய நிலச்சரிவு அல்ல. ஒரு மலைப்பகுதி அப்படியே வீழ்ந்து கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் வரை வழியில் இருந்த வீடுகளை எல்லாம் வாரிசுருட்டி இருக்கிறது. இரவு நேரத்தில் பெரும் கனவோடு தூங்கிய மக்கள், நொடி பொழுதில் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

 

சூர மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய மூன்று இடங்களிலும், மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு அந்த பகுதிகளை மூடிக் கொள்ள, தோண்ட தோண்ட உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்று இன்னும் துல்லியமாக சொல்ல முடியவில்லை.

 

பேரழிவு நடந்த இடத்தில் இருந்து ஏழு கிலோமீட்டருக்கு தாண்டியெல்லாம் சடலங்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மிக மோசமான பாதிப்பை இந்த இயற்கை பேரழிவு நிகழ்த்தி இருக்கிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ நெருங்கி உள்ளது. இன்னும் பல பேரை காணவில்லை என்று கூறப்படும் நிலையில், இதுவரை உயிரோடு இருந்தவர்களை மீட்டு விட்டோம் என்றும், இனி யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கேரள அரசு கூறிவிட்டது.

 

இயற்கையின் கோரத்தாண்டவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் வயநாட்டிற்கு பலரும் உதவி வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசு, கேரளாவிற்கு 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கிருந்து இரண்டு ஐ ஏ எஸ் அதிகாரிகளையும் அனுப்பி இருக்கிறது. இந்த துயர நேரத்தில் தங்களுக்கு தோள் கொடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனும் கூறி இருக்கிறார்.

 

இந்த நிலையில், கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 20 லட்சம் ரூபாய் அனுப்பி இருந்தார் நடிகர் விக்ரம். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் அவரது தம்பி கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோர் ஒன்றிணைந்து கேரளா அரசுக்கு 50 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்கள். மிகவும் துயரமான நேரத்தில் கேரளாவுக்கு கை கொடுத்த சூர்யாவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

சற்று முன்