துபாயில் 2025ம் ஆண்டுக்கான SIIMA விருதுகள் அறிவிக்கப்பட்டன. துபாய் எக்ஸ்போ சிட்டியில் உள்ள துபாய் கண்காட்சி மையத்தில் SIIMA 2025 திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று தொடங்கியது. 2ம் நாளாக இன்று (6ம் தேதி) தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகினருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் 2024ம் ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் சிறந்த திரைப்படம் SIIMA விருதை பெற்றது.
கல்கி 2898ஏடி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த வில்லன் விருது, மூத்த நடிகர் அமிதாப்பச்சனுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் வழங்கப்பட்டது. புஷ்பா 2 படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது, படத்தின் இயக்குனர் சுகுமாருக்கு சிறந்த இயக்குனர் விருதும் வழங்கப்பட்டது. புஷ்பா 2 படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ராஸ்மிகா மந்தனாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
SIIMA 2025 விருது வென்றவர்கள் முழு விவரம் வருமாறு, சிறந்த படம் – கல்கி 2898 ஏடி சிறந்த இயக்குனர் – சுகுமார் (புஷ்பா 2 தி ரூல்) சிறந்த இயக்குனர் – பிரசாத் வர்மா (ஹனுமான்) சிறந்த நடிகர் – அல்லு அர்ஜூன் (புஷ்பா 2) சிறந்த நடிகர் – தேஜா சத்யா (ஹனுமான்) சிறந்த நடிகை – ராஸ்மிகா மந்தனா (புஷ்பா 2) சிறந்த நடிகை – மீனாட்சி சவுத்ரி (லக்கி பாஸ்கர்) ஆகியோர் SIIMA – 2025 விருதுகள் பெற்றனர்.
சிறந்த துணை நடிகர் – அமிதாப் பச்சன் (கல்கி 2898 ஏடி) சிறந்த துணை நடிகை – அன்னா பென் ( கல்கி 2898 ஏடி) சிறந்த இசையமைப்பாளர் – தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா 2) சிறந்த பாடலாசிரியர் – ராமா ஜோகய்யா சாஸ்திரி (தேவாரா) சிறந்த பின்னணி பாடகர் – சங்கர் பாபு கந்துகுரி ( பீலிங்ஸ் புஷ்பா 2) சிறந்த பின்னணி பாடகி – ஷில்பா ராவ் (சுட்டமல்லே தேவாரா) ஆகியோரும் SIIMA – 2025 விருதுகளை பெற்றனர்.
மேலும் சிறந்த வில்லன் – கமல்ஹாசன் (கல்கி 2898 ஏடி) சிறந்த அறிமுக நடிகை – பங்கூரி பாக்யஸ்ரீ போர்ஸ் (மிஸ்டர் பச்சன்) சிறந்த அறிமுக நடிகர் – சந்தீப் சரோஜ் (கமிட்டி குரோளு) சிறந்த அறிமுக இயக்குனர் – நந்த கிஷோர் யேமானி, சிறந்த அறிமுக தயாரிப்பாளர் – நிஹாரிகா கொனிடேலா, சிறந்த ஒளிப்பதிவாளர் – ரத்னவேலு (தேவாரா) ஆகியோர் SIIMA – 2025 விருதுகளை வென்றனர்.
அடுத்து சிறந்த நகைச்சுவை நடிகர் – சத்யா ( மாத்து வதரலா 2) ஆகியோர் தெலுங்கு திரையுலகில் இருந்து நேற்று SIIMA – 2025 சிறந்த விருதுகளை பெற்றனர். இன்று மலையாளம் மற்றும் தமிழ் திரை உள்ளவர்களுக்கு SIIMA – 2025 விருதுகள் வழங்கப்பட உள்ளன. வழக்கமாக நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர் என கதாநாயகனாக நடித்த படங்களுக்கு விருது வாங்குவார். இந்த முறை சிறந்த வில்லன் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.





