யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமாக ஆனார்.

யாஷிகா ஆனந்த் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு”, “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “ஜாம்பி” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது “பாம்பாட்டம்”, “சல்ஃபர்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் சமீப நாட்களாக அஜித் மனைவி ஷாலினியின் தம்பியான ரிச்சார்ட் ரிஷியுடன் நெருங்கி பழகி வருவதாக தெரிய வருகிறது. ஷாலினியின் தம்பியான ரிச்சார்ட் ரிஷி, சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட மோகன் ஜீயின் “திரௌபதி”, “ருத்ர தாண்டவம்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ரிச்சார்ட் ரிஷி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் யாஷிகா ஆனந்துடன் நெருக்கமாக இருக்கும் வகையில் பல புகைப்படங்களை சமீப நாட்களாக வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஒரு புகைப்படத்தில் யாஷிகா ரிச்சார் ரிஷிக்கு முத்தம் கொடுப்பது போல் இடம்பெற்றிருக்கிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இதனை பார்க்கும் ரசிகர்கள், “யாஷிகா அஜித்துக்கு சொந்தக்காரராக ஆகப்போகிறார்”, “இருவருக்கும் எப்போது திருமணம்” போன்ற கம்மெண்ட்டுகளை இட்டு வருகின்றனர். ஒரு பக்கம் “யாஷிகாவை லவ் பண்ணாதீங்க” போன்ற நெகட்டிவ் கம்மெண்ட்டுகளும் வருகின்றன.
எனினும் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து ரிச்சார்ட் ரிஷியோ அல்லது யாஷிகா ஆனந்தோ வாயை திறந்தால்தான் உண்மை என்ன என்று தெரியவரும்.





